பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 739


அஞ்சல் முகவரி:-

     
அ/மி. அகஸ்தியர் திருக்கோயில்
     சேது ரஸ்தாசாலை
     அகஸ்தியம்பள்ளி & அஞ்சல் - 614 810
     (வழி) வேதாரண்யம் - S.O.
     வேதாரண்யம் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

244 /127. திருக்கோடி

கோடிக்கரை / கோடியக்கரை, குழகர் கோயில்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     வேதாரண்யத்திலிருந்து கோடிக்கரைக்குப் பேருந்து செல்கிறது.
சாலையின் இருபுறமும் உப்பளங்கள், மரங்கள் காட்சி தருகின்றன.
கோடிக்கரை காட்டுப் பகுதியில் உள்ளது. வேதாரண்யத்திலிருந்து பேருந்தில்
வருவோர் குழகர் கோயில் எனக்கேட்டுக் கோயிலருகில் இறங்கவேண்டும்.
சிறிய ஊர், (இதற்கு 1 1/2 கி.மீ. -ல் கோடிக்கரை தீர்த்தமும் (கடல்)
ருத்திரகோடி தீர்த்தமும் உள்ளன.)

     கோயில் - அமைதியான சூழல், நகரத்தார் திருப்பணி.
     இறைவன் - அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
     இறைவி - அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி.
     தலமரம் - குராமரம்
     தீர்த்தம் - அக்னி தீர்த்தம் (கடல்). அமுதகிணறு (கோயிலுள்
              உள்ளது.)

     சுந்தரர் பாடல் பெற்றது.

     திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதகலசத்தை வாயு,
தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது
சிவலிங்கமாயிற்று என்பது வரலாறு. அரணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற பதி.
சுவேதமுனிவரின் மகன் பிரமன், சித்தர்கள், நாரதர், இந்திரன், குழக முனிவர்
ஆகியோர் வழிபட்ட தலம்.