பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 75


     ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ  ஜயேந்திர  சரஸ்வதி
சுவாமிகள்  அவர்களின்  பொன்விழாத் திட்டத்தில் இக்கோயிலின் சுவாமி
அம்பாள்  விமானங்கள்  புதுப்பிக்கப்பட்டுள்ளன.  திருக்கூவப்புராணம் -
தலபுராணம்   உள்ளது.   துறைமங்கலம்     சிவப்பிரகாச    சுவாமிகள்
இத்தலபுராணத்தைப் பாடியுள்ளார்.

     “உருவினார் உமையொடும் ஒன்றிநின்ற தோர்
     திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
     வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
     செருவினான் உறைவிடம் திருவிற்கோலமே.”

     “திரிதரு புரம் எரிசெய்த சேவகன்
     வரி அரவொடு மதிசடையில் வைத்தவன்
     அரியொடு பிரமனதாற்றலால் உருத்
     தெரியவன் உறைவிடம் திருவிற் கோலமே.”

    “நீர்கொண்ட சடையொடு நம்பெருங்
          காமத் தழலவிப்ப நிற்கின்றானைக்
     கூர்கொண்ட கனல் மழுமான் ஆண்மையும்
          பெண்மையுமாய கூற்றிற் கேற்பச்
     சீர்கொண்ட வலனிடங்கொள் நாயகனைப்
          புகலியிறைச் செந்தமிழ்ப்பூந்
     தார் கொண்ட திருவிற்கோலப் பெருமான்தனை
          இதயத் தவிசின் வைப்பாம்.”
                               (தலபுராணம் - கூவப்புராணம்)
                      
                                 -‘தீதுடைய
     பொற்கோல மாமெயிற்குப் போர்க் கோலங் கொண்டதிரு
     விற்கோலம் மேவுபர மேட்டிமையே.’        (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்
     கூவம் கிராமம்
     கடம்பத்தூர் அஞ்சல் - திருவள்ளூர் (வழி)
     திருவள்ளூர் மாவட்டம் - 631 203.