பக்கம் எண் :

796 திருமுறைத்தலங்கள்


     பவானி ஆறு காவிரியில் கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
பழைமையான பெரிய கோயில். பவானி, பவானிகூடல், பவானிமுக்கூடல்,
வதரிகாசிரமம் முதலிய அனைத்தும் ஒன்றே. குபேரன், விசுவாமித்திரர்,
பராசரமுனிவர் முதலியோர் வழிபட்ட தலம்.

     இறைவன் - சங்கமுகநாதேஸ்வரர், சங்கமேஸ்வரர்
     இறைவி - வேதாம்பிகை
     தீர்த்தம் - பவானி காவிரி சங்கமம்
     தலமரம் - இலந்தை

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     கோயிலின் நுழைவு வாயிலில் கோட்டை விநாயகர் உள்ளார்.
உட்புறத்தில் ஒருபுறம் ராஜகணபதி சந்நிதியும், மறுபுறம் முத்துக்குமாரசுவாமி
சந்நிதியும் காட்சி தருகின்றன. கோயிலுள் நுழைந்ததும் வலப்பக்கம் அழகான
மண்டபம் உள்ளது. இங்கு ஆதிகேசவப் பெருமாள் சௌந்தரநாயகி
யோகநரசிம்மர் சந்நிதிகள் உள்ளன.

     உள் பிராகாரத்தில் அறுபத்துமூவர் சந்நிதிகளும், பஞ்சபூத
லிங்கங்களும், சனிபகவான் சந்நிதியும் உள்ளன. கோஷ்ட மூர்த்தமாகப்
பெரிய தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். காசிவிசுவநாதர், ஆறுமுக சுவாமி
சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. ஆடிப் பெருக்கன்று
இத்தலத்தில் நீராடல் விசேஷம். அன்று இலட்சக்கணக்கானோர் இத்தலத்திற்கு
வந்து சங்கமத்தில் நீராடி, இறைவனை வழிபடுகின்றனர். சித்திரை
பௌர்ணமியில் பெருவிழா நடைபெறுகிறது.

     இத்திருக்கோயிலின் பெருமையை விளக்குவதான செவி வழிச்
செய்தியொன்று இப்பகுதியில் சொல்லப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில்
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கோவை மாவட்டத்தில் திரு.காரோ
(W.GARO) என்னும் வெள்ளையதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்தார்.
அவர் ஆட்சிப் பொறுப்புக் காரணமாகப் பவானி வந்து ஆய்வாளர்
மாளிகையில் தங்கினார். இரவு படுத்து உறங்கும்போது மின்னலுடன் இடி
இடித்துக் கொண்டிருந்தது. ஒரு சிறிய குழந்தை வந்து உறங்குகின்ற
துரையைக் கையைப் பிடித்து வெளியே வெகு வேகமாக இழுத்து வந்தது.
மறுநிமிடம் பேரிரைச்சலுடன் அக்கட்டிடத்தின் கூரை கீழே விழுந்து
நொறுங்கியது. நடந்தது அறிந்த துரை திரும்பிப் பார்த்தார். தன்னை
எழுப்பிய குழந்தை நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார். கூப்பிடார்.
கேட்கவில்லை போலும், குழந்தை