பக்கம் எண் :

84 திருமுறைத்தலங்கள்


     மூலவர் சந்நிதி, வலமாக வரும்போது  சப்த  கன்னியர்  உருவங்கள்
உள்ளன.  நால்வர்    பிரதிஷ்டையில்   அப்பர்,   சுந்தரருக்கு  அடுத்து
ஞானசம்பந்தர்   உள்ளார்.   பக்கத்தில்   உள்ள   கல்வெட்டுச்  செய்தி
விளங்கவில்லை. பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை.  கருவறை  முழுவதும்
கல்லால் ஆனது. மேற்புற விமானம் மட்டும் கஜப்பிரஷ்டமாக அமைந்துள்ளது
- கீழ்ப்புறம்   இவ்வமைப்பில்  இல்லை.   கருவறையின்   வெளிப்புறத்தில்
ஏராளமான   கல்வெட்டுக்கள்  உள்ளன.  இக்கோயிலில் 54 கல்வெட்டுக்கள்
உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

     கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர்,
பிரமன்,   துர்க்கை   ஆகியோர்   உள்ளனர்.  சண்டேஸ்வரர் உள்ளார்.
வீரபத்திரர், பைரவர் சந்நிதிகள் உள.

     துவாரபாலகரைக்  கடந்து  உள்  சென்று மூலவரைத் தரிசிக்கிறோம்.
மூலமூர்த்தி - சுயம்பு - தீண்டாத் திருமேனி. சதுரபீட ஆவுடையார்.

     இலிங்கம்,   மேற்புறத்திலும்,   பக்கவாட்டில்   இரு   புறங்களிலும்
வெட்டுப்பட்டுள்ளது. மேற்புறமும் - மூங்கிற் புதரிலிருந்து வெளிப்பட்டதால்-
சொர சொரப்புடன், தழும்புகளுடன் திகழ்கின்றது.

     சுவாமிக்கு   எண்ணெய்க்   காப்பு   மட்டும்   செய்யப்படுவதில்லை.
18-6-1990ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

    ‘சிந்தையிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
     வந்துமாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
     மைந்தர் மணாளர் என்ன மகிழ்வாரூர் போலும்
     பைந்தண் மாதவி சோலைசூழ்ந்த பாசூரே.’

     ‘கண்ணின்அயலே கண்ஒன்று உடையார் கழல்உன்னி
     எண்ணுந்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
     உண்ணின்று உருவ உவகை தருவாரூர் போலும்
     பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.’     (சம்பந்தர்)

    ‘முந்தி மூவெயில் எய்த முதல்வனார்
    சிந்திப்பார் வினை தீர்த்திடுஞ் செல்வனார்
    அந்திக்கோன் தனக்கே அருள் செய்தவர்
    பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.’

    ‘புத்தியினாற் சிலந்தி யுந்தன் வாயினூலாற்
        பொதுப் பந்தரது இழைத்துச் சருகான்மேய்ந்த
    சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்யச்
        சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான்மிக்க