அதிசயப்பத்து “எண்ணிலேன் திருநாமம் அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப் படுகின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.” புணர்ச்சிப்பத்து “ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய சேற்றிலழுந்தாச் சிந்தை செய்து சிவன்எம் பெருமான் என்றேத்தி ஊற்று மணல்போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டுப் போற்றி நிற்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.” வாழாப்பத்து “பாவநாசா உன்பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத்தரசே திருப் பெருந்துறையுறை சிவனே மூவுலகுருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே அருட்பத்து எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே தக்கநற்காமன் தனதுடல தழலெழவிழித்த செங்கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே. |