|
கைப்படு
சுகமலாற் கரையில் பேரின்ப
மெய்ப்படு சுகநிலை மிகவுஞ் சேய்த்தென
ஐப்படு மீயின்மாய்ந் தழியும் லௌகிக
மைப்படு மனத்தரை மானு மாலிவன்.
|
50 |
|
|
|
|
ஆயுழி
யுளத்தழுக் காறெ னும்புலை
மேயுழி நற்குண விபவ மார்திருப்
போயுழி யறிவரி தாகப் போக்கிடுந்
தீயுழிப் புகுத்திடு மென்பர் சீரியோர்.
|
51 |
|
|
|
|
தலைப்படு
முணர்விலா ருலக சாலத்து
வலைப்படு மானென மறிந்து வஞ்சகப்
புலைப்படு புவனபோ கத்தைப் புந்தியற்
றுலைப்படு மாமையி லுவப்ப ரொள்ளியோய்.
|
52 |
|
|
|
|
அன்பருக்
கன்பரா மகில லோகவேந்
தின்பதுன் பங்களை யியைந்த வாறுதம்
மன்பதைக் கூட்டுவர் மரபிற் றாயென
நன்புதல் வரினமைந் தொழுக னங்கடன்.
|
53
|
|
|
|
|
ஈண்டிதை
மறந்திடா திதயத் தோர்தியென்
றாண்டுநின் றெழுந்திள வரசற் காக்கிய
மாண்டகு கடிமனை புகுந்து மைந்தநீ
காண்டகக் கவினிய காட்சி காணென்றான்.
|
54 |
|
|
|
|
சித்திர
மாளிகை யகத்துத் திண்சுவர்ப்
பத்தியங் கனல்பிடித் தெரியும் பான்மையும்
அத்தகு கொழுங்கன லவிக்க வாண்டொரு
குத்திரன் விரைந்துநீர் சொரியுங் கொள்கையும்.
|
55 |
|
|
|
|
அகத்தொளி
ரிருங்கன லவிந்தி டாதொரு
மகத்துவன் கரந்தெதிர் மருங்கு நின்றெரி
முகத்தரு ளெண்ணெயை யுகுத்து மூட்டலும்
ஜகத்தையுள் ளுவர்த்தவன் சமையக் காண்குறா.
|
56 |
|
|
|
|
மாட்சிசா
லருமறை வகுத்து மன்னர்கோன்
ஆட்சியைத் தெருட்டிடு மறிஞ வாயவிக்
காட்சியின் பொருளெது கழறு வாயெனா
நீட்சிசான் மதிவலா னிகழ்த்து வானரோ.
|
57 |