|
எய்த
வீசிய வெறிந்தன வேதிக ளெவையும்
நொய்து கேடகப் புறத்தினா னூக்கின னெனினுங்
கைத வத்தினாற் சிற்சில வாக்கையிற் கரந்து
செய்த காயமென் றுணர்ந்துமங் கிடைந்திலன் றீரன்.
|
90 |
|
|
|
|
காற்றுக்
கோடுபுன் பூளையிற் கருவிகை போக்கித்
தோற்றுக் கூளியும் பின்னிடு மிவர்வலி தொலைத்துக்
கூற்றுக் கேவிருந தாக்குவ லென்பது குறியா
வேற்றுக் காலமொன் றின்றென நெடுங்கைவாள் விதிர்த்தான்.
|
91 |
|
|
|
|
மந்தி
ரத்தினி வாளினை விதிர்த்தலு மறவோர்
தந்தி ரம்பட வெமக்கினித் தரிப்பிலை யென்னாச்
சிந்தி யோடின ரிரவிமுன் னிருளெனத் திகழ்ந்த
திந்தி யங்களை யவித்தவ னெழின்முக விந்து.
|
92 |
|
|
|
|
வண்டர்
தோல்வியுந் தொண்டன்வாள் வலிமையு மருங்கு
கண்டு நின்றவர் யாவருங் கைகுவித் திறைஞ்சி
அண்டர் நாயக னருட்செய லிதுவென வவர்வாய்
விண்டு சிந்தின ரானந்த வாரியாம் விழிநீர்.
|
93
|
|
|
|
|
கருகு
சிந்தைய ருடைந்துவெந் நிட்டவக் கணமே
பெருகு பேரின்ப மனைக்குளும் பிறங்கர மியத்தும்
உருகு காதலி னொள்ளியோ யுள்ளுற வருக
வருக வென்றுநன் மங்கல வாழ்த்தொலி மலிந்த.
|
94 |
|
|
|
|
அலகை
தோற்றன வுட்பகை யவிந்தன வாத்த
உலக பாசமு மொழிந்தன வினியொரு போதுங்
கலக மின்றெனக் கைமலர் சென்னியிற் கவின
அலகி லானந்த பரவச மடைந்தன னறிஞன்.
|
95
|
|
|
|
|
சத்தி
யங்கடைப் பிடித்துநந் தம்பிரா னருளாற்
பத்தி மார்க்கத்து நிலைநின்ற பவித்திரன் பவஞ்சப்
பித்தி யாவையும் புறநிறீஇப் பேரின்ப மல்கு
முத்தி வீட்டினுட் புகுந்தனன் ஜெயத்தொனி முழங்க.
|
96 |
|
|
|
|
இன்ப
வீட்டினுட் புகுதலு மெம்பிரா னடியர்
அன்பு மீக்கொளத் தழுவின ராதரம் புரிந்தார்
நன்பு லத்துவைத் தாசிகள் பற்பல நவின்றார்
துன்ப மிங்கிலை யிலையொரு சோதனை யென்றார்.
|
97 |