|
அம்மலைச்
சாரலை யடுத்தங் கோர்சிறை
மும்மலத் தளையொடு முடங்கிப் பாந்தள்போல்
அம்மகே டுணர்கிலா வசடர் மூவர்தாங்
கைம்மிகு துயில்கொளக் கருதி நோக்கினான்.
|
3 |
|
|
|
|
ஐயகோ
விவர்நிலை யளிய வாழியான்
வெய்யகோ பாக்கினி சுலவு மேலைநாள்
உய்யவோ மதிதுயி லுணர்த்த னன்றெனா
மெய்யவா வுடனடுத் துரத்து விள்ளுவான்.
|
4
|
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
அந்தோ
வந்தோ வென்னிது றக்கம் மறிவில்லீர்
முந்தோ ராதே வந்தபி னெண்ணு முழுமூடச்
சந்தர பத்தா லென்பய னுண்டாந் தலைதூக்கி
நந்தா வின்ப நன்னெறி சேர்மின் நமரங்காள்.
|
5
|
|
|
|
|
உடலையு
ருக்கிக் குருதிவ டித்திட் டுயிர்தந்த
கடலைநி கர்க்குங் கருணையி ருப்பைக் கருதாமே
புடவிம யக்கிற் சுழலவி டுக்கும் புலைமார்க்க
நடலையை நச்சிச் சுடலைபு காதீர் நமரங்காள்.
|
6
|
|
|
|
|
மஞ்சன்ம
காதே வற்கொரு வள்ளன் மநுவேலன்
கஞ்சம லர்த்தா டஞ்சமென் றுள்ளங் கசியாமே
வஞ்சம னப்பேய்ப் கஞ்சலி நல்கன் மதியோகொல்
நஞ்சமு தாகக் கொள்வது நாசம் நமரங்காள்.
|
7 |
|
|
|
|
சிந்தனை
யின்றிக் கண்படை கொள்வீர் தெறுகாலன்
வந்தெதிர் நிற்பி னென்கொல்செய் கிற்பீர் மதியில்லீர்
இந்தம யக்கைச் சிந்துமி ரக்ஷைக் கிதுகாலம்
நந்திடு முன்னே நம்பனை நாடும் நமரங்காள்.
|
8 |
|
|
|
|
இன்மையி
னின்று மான்மவி வேகத் தெழில்கொண்ட
ஜென்மமெ டுத்தீர் மெய்வழி கண்டுந் தெருமந்து
கன்மவ சத்தா லின்றொரு மிக்கக் கவிழ்கின்றீர்
நன்மதி யோவித் துன்மதி சொல்லும் நமரங்காள்.
|
9 |
|
|
|
|
செல்கலி
ரின்னே சிந்தைதி ரும்புஞ் சிற்றின்பம்
அல்கலி றுன்ப வாழிய மிழ்த்தி யடுவிக்கும்
மல்குமெய்ஞ் ஞான சிற்சுக போகம் வரைவின்றி
நல்குகி றிஸ்தெம் மானரு ணாடும் நமரங்காள்.
|
10 |