|
கெடுக்குந
ரடர்ந்துபல் கேடு சூழினு
நடுக்குறு நோய்பல நலியு மேனுங்கை
எடுக்குநர்க் கிறையரு ளிலங்கு மாறுபோல்
உடுக்கணம் விளங்கின வும்ப ரெங்குமே.
|
6 |
|
|
|
|
மருட்டுபுன்
மாக்கள்செய் வஞ்சப் போதக
இருட்டுறு மிருதயத் துணர்ச்சி யேய்ந்திட
அருட்டகு குரவர்மெய் யன்பி னாலகந்
தெருட்டுபோ தனையெனத் திகழ்ந்த தாரகை.
|
7
|
|
|
|
|
ஆன்றபே
ரகல்விசும் பணவி யெங்கணு
மீன்றிகழ்ந் தொளிர்வன விட்பு லத்துநங்
கோன்றிரு நந்தனங் குலவி ஜோதிய
வான்றருக் குலம்பொலி மலரை மானுமே.
|
8
|
|
|
|
|
சோதனைக்
கிடைந்திடாச் சூர சேனன்மெய்
வேதிய னெனநனி வியந்து மேம்படு
தூதர்தூ வியமலர்த் தொகுதி போலுமால்
மீதுறத் திகழ்ந்திடை மிளிருந் தாரகை.
|
9 |
|
|
|
|
அடங்கின
விலங்குபுள் ளடவி யார்ப்பொலி
அடங்கின பல்லியத் தணிகொள் பேரிசை
அடங்கின பணிமுறை யகில காரியம்
அடங்கின பொறிபுல னவித்த யோகிபோல்.
|
10
|
|
|
|
|
இத்திற
முன்னிசி யிருட்டொ டேகிய
வித்தக வேதியன் விரைந்து போயெழிற்
சத்திரப் புறக்கடைத் தலையைக் கிட்டினான்
அத்தகு காவல னாரை நீயென்றான்.
|
11 |
|
|
|
|
நாசதே
சத்துளே னயந்து நாடொறும்
பாசவெவ் வினைத்தொழில் பயின்ற பாமர
நீசன்முற் பெயரவ பத்த னின்மல
ஈசனா ரருள்பிடித் திழுத்த திவ்வழி.
|
12 |
|
|
|
|
வந்தன
னுபாதிமா மலையின் மீதுள
நந்தனத் திருந்துயி னயந்து நன்மதி
சிந்தினே னதுபல தீங்கு மோசமுந்
தந்ததா லிருள்வழி தவித்து வந்தனன்.
|
13
|