பக்கம் எண் :

182

 

நரம னாலயத் திடம்பெறு பாவமே நாளும்
பரம நாயன்கை மாறின்றிப் பாலிக்குங் கிருபை
உரமு றாவகை துரந்திடு மென்பது முணர்ந்தேன்
வரம னோகர நுனித்துணர் மதிவலோய் மனத்துள்.      

46
     
 

மற்று மேலைநாள் வருநடுத் தீர்வையின் மரபைச்
சொற்ற னன்னொரு சொப்பனி கேட்டுளந் துளக்கம்
உற்ற தென்னினு முடையவன் றிருவுளச் செயலான்
முற்று மெற்கது பெரும்பய னீந்தது முதியோய்.         

47
     
 

நித்தி யானந்த மாடத்து நிலவர மியத்திற்
பத்த ரோர்சிலத் வெள்ளுடை பரித்துல வுவதுஞ்
சுத்த வீரனோர் தூயவன் வாயிலிற் றுன்னி
முத்தி வீட்டினுட் புகுந்ததுங் கண்டவா முதிர்ந்ததே.     

48
     
 

உள்ளு றப்புக விரைந்தனே னுத்தம குரவன்
வள்ள லுத்தர மின்றென மறுத்தெனை விடுத்தான்
எள்ள ரும்பல காட்சியிற் றெருட்டியென் றிசைத்தான்
கள்ள மின்மறை வேதியன் கனங்குழை யுரைப்பாள்.     

49
     
 

உலங்கொ டோளினா யுன்னனுளத் துள்ளதுன் னுரையாந்
துலங்கு கண்ணடி மயிலறக் காட்டிடத் துணிந்தேம்
நலங்கொண் மார்க்கத்து மற்றெதை யெதிர்ந்தனை நம்பி
புலங்கொ ளத்தெரித் துரையென வாரியன் புகல்வான்.   

50
     
 

குருதி சிந்தியோர் குன்றிடைக் குரிசினம் மிளங்கோ
பரிதி போலொளி கான்றுயிர் வடுத்திடும் பரிசைக்
கருதி நோக்கின னோக்கலுங் கழிந்தது சும்மை
சுருதி நூல்வலாய் தோன்றினர் மூவரச் சூழல்.         

51
     
 

ஆய காலையிற் பாவமன் னிப்பெனக் கருளி
ஏய பேரடை யாளங்க ளிவையெனக் கீந்து
மீயு யர்ந்தவா னகத்திடைக் கரந்தனர் விரைந்து
கூய மெய்யடி யாருளங் குடிகொண்ட கோமான்.       

52
     
 

கொள்ள ருந்துயில் கொண்டவத்க் கறிவினைக் கொளுத்த
எள்ளி மூவருந் துயின்றன ரெழுந்தில ரொருசார்
கள்ள மார்க்கத்த ரிருவர்வந் திடையிலே கலந்து
நள்ளி ருட்படு கவர்வழி பிடித்தனர் நயந்து.          

53