|
அநித்தம்
பாவசந் தோடங்க ளனைத்தும தன்றித்
துளித்தி றஞ்சதோ தயந்தரு மென்றருட் டுணையால்
நுனித்து ணர்ந்துபே ரின்பலோ கத்தையே நுதலித்
தனித்து நூல்வழி வரவொருப் பட்டனன் றக்கோய்.
|
62
|
|
|
|
|
இனைய
யாவுமற் றொருபக்ஷ மெம்பிரா னன்புந்
தனையன் றண்ணளி யும்புனி தாவியின் றயையும்
நினையுங் காலிந்த நீணிலத் துறவினை நினைக்கும்
வினைய மென்னவா மீதென்றன் முக்கிய விநயம்.
|
63
|
|
|
|
|
என்று
வேதியன் றன்னுறத் தியற்கையை யியம்பத்
துன்றி ருங்குழற் சுமதியென் றுரைபெறுந் தோகை
நன்று நின்கரு விழியென நயந்தவை சிலவீங்
கொன்றி வந்தவோ வுன்னொடு முரையென வுரைப்பான்.
|
64
|
|
|
|
|
பச்சைப்
பூகநன் றெழுகுலக் குயின்மொழிப் பாவாய்
கொச்சைப் பாமரக் குடிமையிற் பழகிய கொடிய
இச்சைப் பாடுகள் சிற்சில வென்னொடு மிசைந்தே
அச்சப் பாடுக டருவன யாண்டுமென் னகத்துள்.
|
65 |
|
|
|
|
விதிவி
லக்கிகந் துஞற்றுதல் விருப்பமின் றேனும்
விதிவி லக்கிகந் துஞற்றுவ லோரொரு வேளை
விதிவி லக்கிகந் திடுவன்யா னாயினும் விதித்த
விதிவி லக்கெலா நன்றென விருப்புடன் ரமிப்பேன்.
|
66
|
|
|
|
|
என்ற
மாத்திரத் தையவுன் னியற்சுபா வேச்சை
துன்று நன்மனோ தத்துவ விரோதமாய்த் துளங்கி
நின்ற தென்னிலவ் விச்சையை நிலவுறா தடக்கி
வென்றி யெவ்வகை விளைத்தனை விளம்புதி யெனலும்.
|
67
|
|
|
|
|
தாக்கி
டப்படுஞ் சிற்சில வேளையிற் றமியேன்
தீக்கு ணங்களவ் வமைதியை மயலறத் தெருண்டு
நோக்கி லோர்பதி னாயிரங் கோடிபொன் னொடியில்
ஆக்கல் போலுமெய்ம் மகிழ்ச்சியுண் டாமகத் தணங்கே.
|
68 |
|
|
|
|
சுபாவ
விச்சையைக் கெடுத்துவே ரெடுத்தறத் துடைக்கும்
உபாய மைம்பொறி வாய்வழி புலனுறா தொருங்கே
கபாட பந்தனஞ் செய்வதென் பாரது கருதில்
அபாவம் வாய்ப்பழக் கன்றியோர் பயனிலை யம்ம.
|
69 |