|
ஒன்று
வேண்டுவ லுன்னத கோமகன்
மன்றி ரக்ஷைமு டித்தவ ரம்பினில்
அன்ற டைந்தவ ரும்பெரும் பாட்டினை
இன்றி சைக்கமன் றாடுகின் றேனென்றான்.
|
102
|
|
|
|
|
பத்தி
யென்னும்ப வித்திரை பாங்குளார்
சித்த மும்மவர் செப்பிய சீர்மையும்
உய்த்து ணர்ந்துள்ளு வப்பொடு மொள்ளிய
வித்த கக்கனி வாய்மலர் விண்டனள்.
|
103
|
|
|
|
|
எம்மு
யிர்த்துணை யீரிறை வன்னொரு
செம்மல் மேயசி லுனையின் பாடுகள்
மம்மர் நீங்கிய வானவர்க் காயினும்
அம்ம சொல்லிய ளவிடற் காவதோ.
|
104 |
|
|
|
|
தரையில்
யாவரும் பாவிகள் தண்டனை
நிரைய நித்திய மாநடு நின்றவர்
ஒருவ ரேயொருங் கத்தரித் தார்சிறு
வரையில் யாவரந் நோவைவ குப்பரே.
|
105 |
|
|
|
|
பாரை
வானப்ப ரப்பைப்ப ரவையை
வீரை வாலுகத் தையள விட்டிடுஞ்
சீர ராயினும் ஜேசுத்த ரித்தவக்
கோர வாதைகு ணித்திடற் பாலரோ.
|
106
|
|
|
|
|
வாக்கொன்
றிற்குளிவ் வையம டக்கிய
கோக்கு மாரனல் லாலிக்கு வலயந்
தீக்க நின்றசி னக்கொடுந் தீத்திரள்
ஆக்கை மீதுத்த ரிக்கவல் லாரெவர்.
|
107 |
|
|
|
|
பாழி
யம்புவி யுய்யப்ப ரன்சுதன்
வாழி மேனிவ தைப்புண்ட நீர்மையை
ஊழி யூழிநி னைத்தழு தொண்கணீர்
ஆழி யாகவு குப்பினு மாற்றுமோ.
|
108 |
|
|
|
|
வையம்
விண்டிடும் வான்கதிர் மாய்ந்திடுஞ்
சைய முந்தக ருந்தலை சாய்ந்தெனில்
ஐயன் மேயவ வஸ்தையை யாய்ந்துரை
செய்ய யானொரு சின்மதி யோதரம்.
|
109
|