| |
தூதர்
சொற்றசு மங்கல வார்த்தைகொண்
டேத் மில்லவ ரேகுழி யெம்முயிர்
நாதன் கண்ணெதிர் தோன்றிந லங்கிளர்
மாத ரீர்நன்கு வாழ்கென வாழ்த்தினார்.
|
454 |
| |
|
|
| |
அருளின்
வாழ்வைய றங்கிள ராரணப்
பொருளை யன்பின்பு ணரியைப் புங்கவர்
தெருளுஞ் சின்மய தேசிக மூர்த்தத்தை
மருளொன் றின்றிம டந்தையர் நோக்கியே.
|
455 |
| |
|
|
| |
உழுவ
லன்பொடு ளங்கினிந் தொல்லெனக்
கழுதின் வன்றலை யைத்தெறு காற்றுணை
தொழுது வீழ்ந்தனர் பன்முறை தோத்திரித்
தெழுது பாவையன் னாரினி தேத்தினார்.
|
456 |
| |
|
|
| |
நன்று
யாவுந லிவுறு சீடருக்
கின்றி யம்பியெ னைக்கலி லேயநாட்
டொன்ற விள்ளுமி னுள்ளங்க லங்கன்மின்
என்று ரைத்துக்க ரந்தன ரெம்பிரான்.
|
457 |
| |
|
|
| |
ஓகை
மாநற வுண்டுக ளித்தவத்
தோகை மார்பனொ ருதிருத் தொண்டர்பால்
ஏகி யீசனெ ழுச்சியும் யாவையுஞ்
சோக நீங்கவ குத்தனர் சொல்லினார்.
|
458 |
| |
|
|
| |
அணங்க
னாருரை கேட்டுமெய் யாரணக்
குணங்கள் பூத்தகு ருத்துவ ராருயர்
உணங்கி மீண்டிங்கு யிர்த்தெழ லொல்வதோ
இணங்கு றாதென வெய்தின ரையமே.
|
459 |
| |
|
|
| |
முற்ற
றிந்தமு ழுமுதன் முன்னுறச்
சொற்ற வாய்மையு முள்ளிலர் தொக்குடன்
இற்றி துண்மையின் னேதனி யீமத்தின்
உற்ற றிந்திடு வாமென வோடினார்.
|
460 |
| |
|
|
| |
ஒன்று
மன்பனு லம்பொரு பேதுரு
என்ற சீடரி ருவரு மீமத்திற்
சென்ற கத்துறத் தேடினர் காண்கிலர்
மன்றல் யாக்கையைச் சிந்தைவ ருந்தியே.
|
461 |