பக்கம் எண் :

335

  உத்தமனைப் பழிசாட்டிப் பெருங்காம முளத்தடக்கிப்
பத்தினியா நடித்துரிய கணவனுக்குப் பகைகாட்டுங்
குத்திரையிற் புறம்பேசி யகத்தடங்குங் கொடுவினையர்
எத்தனையர் தகுங்கால மிடந்தேடித் திரிகின்றார்.

54
   
 

புண்ணியனுத் தரசுருதிப் பொருளைவிரித் துரைக்கவரும்
நுண்ணறிவி லருட்கிரியை விளக்குமென நுவல்கிற்றி
விண்ணிலவு பொருள்விளக்கு மேதினிக்குத் தூரதிட்டிக்
கண்ணடிதன் னகப்பொருளி னிலைதேருங் கருத்துளதோ.

55
   
              வேறு.
   
  மல்கு தேவவ ரப்பிர சாதமே
நல்கு மானத பாக்கிய நன்குறப்
பல்கு கல்வியிற் பாற்படு கேள்வியிற்
புல்கு மென்றல்பு லமையின் பாலதோ.
56
   
  நெறிதி கழ்த்திய நின்மல னிவ்வெலாம்
அறிது மென்றவ டியற்கு நுஞ்செயல்
பிறிது றாவகை பேணுதி ரென்றசொல்
அறிதி யல்லைகொ லோமற்ற யர்த்தியோ.
57
   
  துதிபெ றுந்திரி யேகநுஞ் சுப்பிர
விதிநி டேதவி ளக்கைய லர்த்தியென்
மதிவி ளக்குக மற்றது காத்தியான்
கதிவ ழிப்படை கொள்வல்க ருத்தொடே.
58
   
  பேதை யேன்பிர பஞ்சம யலறப்
போத நல்குக பூரண வாஞ்சையாய்
வேத நூனெறி பற்றிவி ளியுமட்
டாதி யாயநுட் டிப்பல கத்தொடே.
59
   
  வினைய றுத்துமெய் வீடருள் பாதையில்
எனைந டத்துக வெம்பெரு மானதென்
மனம கிழ்ச்சியென் றின்னிசை மன்னவன்
முனநி கழ்த்துமு றைமறந் தாய்கொலோ.
60
   
  இத்தி றத்துரை கோடலன் யானுனோ
டெத்தி றத்துமி ணங்கல னென்றியால்
வித்த சக்சுரு திக்குமெய் வேதிய உத்த
மர்க்குமொவ் வாதுன்னு ரைத்திறம்.
61