|
மறமெ
லாங்குடி புகுந்துள மானவ ருளத்தில்
அறமெ லாங்குடி போயதவ் வணிநக ரொருவிப்
புறமெ லாம்புலை நிரம்பின பொருவரு ஞானத்
திறமெ லாநகைப் படுவன தீவினை கதிப்ப.
|
47 |
|
|
|
|
மெய்யு
ரைப்பவர் யாவரு மடம்படு மிலேச்சர்
பொய்யு ரைப்பவ ரேயதி புண்ணிய புருஷர்
கையு லோபரே மதியுளார் கசிந்துப காரஞ்
செய்யு மாந்தரே பயித்திய ரிந்நகர்ச் செவ்வி.
|
48 |
|
|
|
|
புகழ்வி
ரும்பியட் டூட்டுவர் புரண்டநூ லவருக்
கிகழ்வ ரேழையை யிரங்கியோர் சற்றுண வீயார்
திகழு ஞானநூல் செப்புவர் திருட்டள வாக
அகழ்வ ரேனைய ரருநிதி வைப்பிட மறிந்தே.
|
49 |
|
|
|
|
பத்தி
நூல்வழிப் போக்கர்மேற் படர்ப்பழி கூறிக்
கத்து வார்தெருத் தெருத்தொறுங் கத்தபங் கடுப்பக்
குத்தி ரத்துவ வேடர்பாற் கூட்டுண்டு களித்து
மித்தி ரத்துவம் பூணுவர் கொக்கன விரகால்.
|
50 |
|
|
|
|
பஞ்ச
தந்திரம் பயிலுவர் காமநூல் படிப்பர்
தஞ்ச மாக்கிய வுடைமையைத் தமதெனச் சதிப்பர்
நஞ்ச மன்னதீ வினையெலா நயந்தனுட் டிப்பர்
வஞ்ச மல்குவாய் மொழியினாற் புதைபட மறைப்பார்.
|
51 |
|
|
|
|
கடனை
வாங்கியே மாற்றுவர் சிலர்சிலர் கையிற்
கடனை வையெனத் தொண்டையை நெரிப்பர்கைக் கணக்கி
கடனை யேற்றிமற் கட்டுவர் சிலர்சிலர் கடுகிக்
கடனை யன்றியோர் காசிலை யெனப்பொருள் கரப்பார்.
|
52 |
|
|
|
|
கொண்ட
பெண்டிரா லூதியங் கொண்டுயிர் கொளுவி
உண்டு தேக்கெறிந் துழலுவார் பாழ்வயி றோம்பி
மண்டு காமவெம் பிணியினால் வரன்முறை மயங்கி
எண்ட காப்பழி பூணுவ ரிகபர மிழந்தே.
|
53 |
|
|
|
|
அன்ன
சத்திரத் துண்டுதேக் கெறிபவ ரனந்தந்
துன்னு காமசத் திரந்தொறுந் துதைபவ ரனந்தம்
மன்னு செல்வர்தம் மனைக்கடை வறியவ ரனந்தம்
இன்ன லுற்றுளங் கசந்தழு மேழைக ளனந்தம்.
|
54 |