|
காளி
கோட்டமு மூட்டமு மாட்டமுங் கதிக்குங்
கூளி நாட்டமுங் குறக்குறி யீட்டமுங் குமையுங்
கோளி னீட்டத்து மனைதொறுஞ் சண்டைகொக் கரிக்குந்
தேளி னீட்டிய விடமெனச் செவிக்கிடர் செருகும்.
|
55
|
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
மயங்காட்டம்
புரிகணிகை மடமாதர் மனமருட்டி
இயங்காட்டி லயங்காட்டி யெழில்காட்டி விழிகாட்டி
தயங்காட்டிப் பயங்காட்டி நகைகாட்டிச் சிகைகாட்டிக்
குயங்காட்டிக் காமுகரைக் குரங்காட்ட மாட்டுவரால்.
|
56 |
|
|
|
|
உண்டாட்ட
மந்தணருக் குரையாட்ட மடவார்க்குக்
கண்டாட்டங் காமுகர்க்குக் களியாட்டங் குடியருக்குக்
கொண்டாட்டம் பரத்தையர்க்குக் குடியாட்டங்
கொடுங்கோற்குத்
திண்டாட்டம் பொளிலர்க்குச் சிரசாட்டங் கெருவிகட்கே.
|
57 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
தன்ன
யங்கெடா துலகுவப் பாக்கலே தருமம்
என்ன தீங்குசெய் தாயினு மீட்டலே பொருள்மற்
றின்ன லின்றியே யருந்தலும் பொருந்தலு மின்பம்
பின்ன ராவதே வீடென்ப திந்நகர்ப் பிரமை.
|
58 |
|
|
|
|
நன்று
ஞற்றுவார்ச் செகுப்பதே நகரதி பதிக்கு
வென்றி தீதுசெய் வினைஞரைப் புரப்பதே வேட்கை
கன்று சிற்றின்ப போகமாங் கண்ணியைக் குத்தி
என்று மாந்தரைப் படுப்பதே யிடையறா வேலை.
|
59 |
|
|
|
|
மன்னு
நற்குண மங்கல வணியிலா மடவார்
நன்னர் மேனியை மினுக்கியு நல்லுடை புனைந்தும்
இன்ன றும்புகை யூட்டியு மெழினலம் புகழ்ந்தும்
பொன்ன ருங்கலந் திருத்தியும் பொழுதுபோக் கடிப்பார்.
|
60 |
|
|
|
|
சதுரர்
யாமெனத் தருக்கிய வாடவச் சழக்கர்
மதுவி றைச்சியுண் டாடியும் வஞ்சனை யிழைத்தும்
முதுவ ரைப்புறக் கணித்தும்வெஞ் சூதுப்போர் முயன்றும்
பொதுமனைத்தொழும் பியற்றியும் பொழுதுபோக் கடிப்பார்.
|
61 |
|
|
|
|
நீச மல்குமா
யாபுரி நெடுநக ரிடைச்சென்
மாசி னூல்வழிக் கிருமருங் கினும்பல வளஞ்சேர்ந்
தோசை பெற்றமா யக்கடை வீதியொன் றுளதிந்
நாச தேசமா தமங்கலக் கழுத்திடு நாண்போல்.
|
62
|