பக்கம் எண் :

385

  எம்மதமு மெய்ம்மதமெ னத்துணிபி சைக்கும்
நம்மதமு மம்மதமு நாட்டுமதம் யாவுஞ்
சம்மதமி லாதுபர லோகபதி தந்த
தம்மதமெய் யென்றுபுகல் சாதுரிய தர்க்கன்.

24
   
  மாயபிர பஞ்சமக ராஜனைம திக்கான்
தேயமுறை யைத்தழுவு சீர்மைசிறி தில்லான்
மேயவுல கத்தவரொ ழுக்கினைவி ரும்பான்
ஆயகுல கேத்திரம றிந்துறவு செய்யான்.
25
   
  அண்டர்பெரு மானுலக டுக்குநெறி யென்று
கண்டநெறி புக்கதுதன் னோடுகழி யாமே
விண்டலம்வி ழுத்தழலின் வேமுலக மென்னா
மண்டலமு ழுக்கவுமி ழுக்கமுயல் வம்பன்.
26
 
  மேன்மைதரு நஞ்சமய மெண்டிசைவி ளக்குங்
கோன்மைகுண தோஷமுரை யாமைபுகழ் கொண்ட
பான்மைமதி யாதுபடு பாவியரென் றெள்ளும்
நோன்மையிலி மன்னுரிமை நோக்குகில னென்றான்.
27
   
  ஆயிடைய பத்தனும றப்பகைமுன் னின்று
நாயகவெ னைக்கனவி லுந்நணுக வொட்டாத்
தீயனக வாயிலறி யேன்பலதி றத்தும்
மாயநக ரத்தவரை வைதவம தித்தான்.
28
   
  வைய்திகம தத்தபிர மாணநம வெல்லாம்
பொய்திகழு நீரவவை போற்றியொழு கிற்பின்
மெய்திகழ்க கோளபதி மேலைநடு நாளில்
வெய்துநிரை யத்தெமைவி ழுத்துவது மெய்மை.
29
   
  என்றினைய குற்றம்விவ ரித்தெமையி ழித்த
தொன்றலவ நேகவித சாபமுமு ரைத்தான்
நின்றவிநி தானியறி நிண்ணயமி தென்றான்
துன்றிருள டைந்தமனை தோறுமுழல் தூர்த்தன்.
30
   
  காளவிட மன்னகடு நெஞ்சனது காலை
மூளனலெ னச்சினமு திர்ந்திறைவன் மொய்ம்பிற்
கேளனமு றப்பதித ரென்சொலின ரென்னாக்
கோளனைவி ளித்தறிவ கூறுகினி தென்றான்.
31