|
(பொ
- ரை) எம்மை மோக்ஷகதியிற் சேர்த்து ரட்சிக்கும் வண்ணம்
தமது காதற்புதல்வனை மனமுவந்து கொடுத்தருளிய கருணைவள்ளலாகிய
சர்வேஸ்வரனுடைய அதிபரிசுத்தமென்னும் அக்கினிப் பிழம்பானது நாலு
திக்கும் பரவித் திரட்சிடைந்து அவியாமல் வளர்ந்தோங்கி எதிரே
வருகின்ற பகைவர் மடியும்வண்ணம் அக்கினியை வீசி அவர்களைச்
சாம்பர் ஆக்கி, இலங்குகின்ற ஜோதிக் கிரணங்கள் மிகும்படி விளங்கி
நிற்கும். பரிசுத்தமென்னும் இந்த அக்கினிப் பிழம்பே சிறப்புப்
பொருந்திய இந்நகரத்துக்கு அகழியைச் சூழ்ந்துகிடக்கும் தழலரணமாகிய
காவற் காடாகும்.
| |
ஒராழி தனையுருட்டி யுலகமெலாங் காத்தளிக்கு
மும்பர்நாட்டுச்
சீராழிப் படையரசன் றீர்க்காலோ சனையறிவே
செறிந்துமல்கும்
பேராழிக் கிடங்காகி மதில்வளைந்து புறங்கிடக்கும்
பெற்றியோரில்
காராழி யெனத்திரண்டு வரும்பகைக்குக் கதியதோ
கதிமற்றன்றே. 36
|
(பொ
- ரை) தனது ஒப்பற்ற ஆஞ்ஞையாகிய
ஏகசக்கிரத்தையுருட்டி உலகமெல்லாவற்றையுங் காத்து இரட்சிக்கின்ற
தெய்வநாட்டுச் சிறப்புப் பெற்ற சக்கிராயுதத்தையுடைய கடவுள்
வேந்தனது தீர்க்காலோசனையாகிய அறிவே நெருங்கிப் பெருகியிருக்கும்
அகழ்க்கிடங்காகி, நாற்புறமும் மதிலை வளைத்து புறத்தில் கிடக்கின்ற
தன்மையை ஆராய்ந்து பார்க்குமிடத்தில் சமுத்திரம்போன்று திரண்டு
வருகின்ற பகைவருடைய கதி அதோகதி யன்றி வேறில்லை.
| |
சீராற்றுந் திருநகர்க்குச் சிறப்பாற்று மரணாகித்
திறலுமாற்றிக்
கூராற்றும் படைக்கலயந் திரப்பொறிகள் பலகுழுமிக்
கொற்றமுற்றி
ஏராற்று மகிலாண்ட கோடியெலாந் தூசியென
வியங்கலாற்றும்
பேராற்ற லுடையபிரான் பெருந்தகைமை யெனப்பிறங்கும்
பெருந்துருக்கம். 37
|
(பொ
- ரை) பெரிய துருக்கமானது செம்மையை நடாத்துகின்ற
திருநகருக்குச் சிறப்பைச் செய்கின்ற அரணுமாகி, அதற்கு வலிமையையும்
செய்து, கூர்மையான படைக்கலங்களும் யந்திரப் பொறிகளும் அனேக
கூட்டங்கூட்டமாய் நிறைந்து வெற்றியை முற்றுப்பெறச்செய்து
நன்மையையியற்றும் அகிலாண்ட கோடிகளையெல்லாம் தூசியைப்போல்
இயங்கச் செய்கின்ற பெரிய வல்லமையுடைய கடவுளின் பெருந்தன்மை
யென விளங்கிநிற்கும்.
|