பக்கம் எண் :

428

  அண்டர் போற்றும ரசிளங் கோமகன் றாளில்
வண்ட மிழ்ச்சுவைத் தேன்மண மாலிகை சூட்டிக்
கண்டு ளித்திரு மஞ்சனங் காதலி னாட்டித்
தெண்ட னிட்டுவிண் ணப்பமின் னோரன செப்பும்.
162
     

        தேவாரம், பிழைநினைந்திரங்கல் (நேரிசை)
   
1. நின்னடிக் கன்பு செய்யா நீசனேன் ஈச னேயுன்
பொன்னடிக் கன்பு செய்யும் புண்ணியர் குழாத்துட் புக்கு
நன்னடை கற்று மில்லே னன்றெலா மொருவி நின்ற
என்னடை யிகந்து மில்லே னென்செய்வான் றோன்றினேனே.
 
2. தன்னுயிர் போல விந்தத் தடங்கடற் புடவி மேய
மன்னுயிர்க் கிரங்கி மேனாள் மநுமக னாகத் தோன்றி
இன்னுயிர் கொடுத்தி ரக்ஷை யீடடிய்ய விறையை யேத்தி
என்னுயி ரோம்பு கில்லே னென்செய்வான் றோன்றி னேனே.
 
3. வன்கணன் படிறன் பொல்லா வஞ்சனென் றிகழ்ந்தி டாதென்
புன்கணுக் கிரங்கி யோர்பூம் பொழிலிடைப் புனித மூர்த்தி
நின்கணீர் சொரிந்து செந்நீர் நிலத்துக வியர்த்தல் கண்டும்
என்கணீர் சொரியக் காணே னென்செய்வான் றோன்றி னேனே.
 
 
4. கதிரொளி மறையப் பூமி கம்பிக்கச் சிமயங் கீறிப்
பிதிர்படச் சிலுவை மீது பெருந்தகை குருதி சிந்தி
வதைபடு திருக்கோ லத்தை மனக்கணாற் றரிசித் தேத்தி
இதயநெக் குருகு கில்லே னென்செய்வான் றோன்றி னேனே.
 
5. கன்றி காம நெஞ்சக் கள்வனேன் காம நீத்த
நன்றிகொண் மாந்தர் போல நடித்திடு நடலை யுள்ளேன்
ஒன்றிய மனத்தோ டெந்தா யுன்னருட் டுணையை நாடி
என்றினி யுய்யப் போவே னென்செய்வான் றோன்றி னேனே.
 
6. தேசுற்ற மின்னார் மோகச் சிக்குளே சிக்கிச் சிந்தை
மாசுற்றே னுலப மாய வாழக்கையை மருண்டு நச்சி
வேசுற்றேன் கவலை யாலே மெலிவுற்றேன் விழைந ராலும்
ஏசுற்றேன் ஈச னேயா னென்செய்வான் றோன்றி னேனே.
 
7. அருளுடை முகிலை யன்ப ராருயிர்க் குயிராய் நின்ற
தெருளுடை யமுதை யுள்ளந் தித்திக்குஞ் செழுந்தேன்
வைப்பே மருளுடை யறிவிற் கெட்டா வாழ்வினை வழுத்தி
வாழேன் இருளுடை மனத்தேன் யானே யென்செய்வான்
                                 றோன்றி னேனே.
 
8. பொறிவழி யுள்ளம் போக்கிப் புலைநெறி யொழுகும பொல்லேன் அறிவிலி யாத லாலே யாத்துமக் கவலை கொள்ளேன்
செறியுடற் போக நச்சித் திரண்டபே ராசை யென்னும்
எறிகடற் குறித்து நின்றே னென்செய்வான் றோன்றி னேனே.