|
மெய்ய
ணித்திரள் கள்வர்கைப் படாமையின் மேலாந்
துய்ய வோகையங் கவற்குள தாமெனத் துணியேல்
ஐய தற்குள வணிகலப் புதுமையுற் றறியா
நொய்ய விவ்விசு வாசிக்கஃ தொல்லுமோ நுவலில்.
|
11
|
|
|
|
|
பொருளி
ழப்பையே நினைந்துபுண் பட்டுளங் கவன்று
மருளி மானிட ரேக்குற்றுப் பலருயிர் மாண்டார்
தெருளி னற்பவிஸ் வாசிக்குத் திரித்துவ தேவ
அருளுற் றுய்த்தது ஜீவனை யதிசய மாக.
|
12 |
|
|
|
|
வறுமை
யெய்தியு முணவின்றி வருந்தியும் பிறராற்
சிறுமை யெய்தியுந் துக்கசஞ் சலங்களாற் றிகைத்தும்
மறுமை யாக்கத்தைப் பேணின னற்பவிஸ் வாசி
வெறுமை யாக்குமோ விழுத்தகு நோன்புளம் விளையில்.
|
13 |
|
|
|
|
என்று
வேதிய னிகழ்த்தலு மிறைஞ்சிநம் பிக்கை
ஒன்று வேண்டுவல் தெருட்டுகென் றெள்ளியோ யேசா
முன்ற னக்குள சுதந்தரம் விற்றுண்ட முறைபோல்
இன்று சொற்றமற் றிவன்செயி லென்பிழை யென்றான்.
|
14 |
|
|
|
|
அப்ப
மெப்படிச் சுடப்பட்ட ததற்குட்டித் திப்பை
எப்ப டிப்புகச் செலுத்தின ரென்பபோ லெம்பி
தப்பு றக்கரு துற்றனை தகவுற விரித்துச்
செப்பு வேனென வாரியன் வகுத்திவை தெரிப்பான்.
|
15 |
|
|
|
|
எம்பி
கேட்டிநம் பொறிபுலன் களுக்கிலக் காகா
தம்ப ரத்துள ரகசியப் பொருளறி வுறுத்தும்
உம்பர் நாயகன் சுருதியவ் வுண்மையை நம்பி
இம்பர் நோற்றலே மெய்விசு வாசத்தி னியற்கை.
|
16 |
|
|
|
|
தெரிவ
ரும்பர ரகசியம் யாதெனச் செப்பில்
புரவு நூல் வழி தெரித்தநம் புராதன சபையின்
குரவ ரேதிரு வசனத்தைத் தொகுத்திது குணித்தார்
கரவி லாதவம் மொழயினைக் கழறுவல் கேணீ.
|
17 |
|
|
|
|
வானம்
பூமியெல் லாவுல கங்களும் வகுத்த
மோன மாகிய சருவவல் லமையுள முதல்வன்
ஞான மேதிரு மேனியாக் கொண்டநந் தாதை
தூந லந்திகழ் வஸ்துவுண் டென்பதென் துணிபு.
|
18
|