| |
தன்னிரு
தயத்தையே சார்ந்து நம்புவோன்
உன்னரும் பயித்தியோன் மத்த னென்றொரு
மன்னவ ஞானிசொன் மதித்துக் கொண்டவர்
பன்னருங் கொடுவிடப் பையென் றோர்வரால்.
|
43
|
| |
|
|
| |
கருதுகென்
றாரியன் கழறக் கேட்டலுஞ்
சுருதிதேர் பனவபொல் லாத துர்க்குணர்
இருதய நிலையெடுத் திசைத்த வாய்மையென்
ஒருதவ றிலாவித யத்துக் கொல்லுமோ.
|
44
|
| |
|
|
| |
நன்றுள
விதயமு நன்ன டக்கையும்
ஒன்றினுக் கொன்றுசான் றாகி யொத்தலான்
மன்றல்சேர் முத்திவீட் டின்பம் வாய்த்திடும்
என்றநம் பிக்கையு மெனக்குண் டோர்தியால்.
|
45 |
| |
|
|
| |
வித்தக
நவமணி விளைந்து மல்கிய
அத்தகு சுரங்கநல் லிதய மாகுமால்
பத்தெனும் விதிவிலக் கோம்பும் பண்புடைச்
சத்திய வொழுக்கமே சாற்று நன்னடை.
|
46 |
| |
|
|
| |
வேதிய
மேலினி விளம்பம் மிருத தென்
சாதக பாதகஞ் சாதுவின் மூலபக்
கோதிலாக் குணத்தனீ குறித்த கூற்றினிற்
பாதக முளதது பகரக் கேட்டியால்.
|
47 |
| |
|
|
| |
ஒள்ளிய
விதயத்தி னொழுங்கு முள்ளுறு
கள்ளவல் லிதயத்தின் கபடுங் காட்டுமால்
உள்ளதை யுள்ளவா றுரைக்கத் தக்கநம்
வள்ளலா ருரையெனு மாற்றுக் கோடுகல்.
|
48 |
| |
|
|
| |
வைதிக
நூற்பிர மாண மாட்சிநூன்
மெய்திக ழவிரொளி விளக்கை யோம்பிடார்
பொய்திக ழிருதயப் புணர்ப்பை நம்பிவீண்
ஐதிக விருட்பிழம் படைந்து மாய்வரால்.
|
49 |
| |
|
|
| |
நன்றுசெய்
பவனிலை நரசி ருட்டியில்
ஒன்றிய நீதிமா னொருவ னும்மிலை
என்றுமெ லாநரஹிருத யங்களுங்
கன்றிய தீவினைக் கழக மென்பவே.
|
50 |