| |
சொந்தநற்
கிரியையாற் றொகுத்த புண்ணியச்
சிந்தையி னீதிமா னாகத் தேறினை
அந்தரத் தாமரை யலர்த்திக் காட்டிய
விந்தையே போலுமால் விகட வேடத்தோய்.
|
67 |
| |
|
|
| |
நீசராம்
பாவரை நீதி மான்களாய்
மாசறச் செயும்விசு வாசம் வல்விதி
வீசுதண் டனைக்கிடை விலக்கி ஜேசுவின்
ஆசறு புண்ணிய வடைக்க லத்திடும்.
|
68 |
| |
|
|
| |
பாசமார்
கிரியையிற் பழுத்த வுன்விசு
வாசவைக் கூளமோ தீர்வை வைகலில்
ஈசன்கோ பாக்கினிக் கெதிர்நின் றுய்ப்பது
பேசுமாக் கினையுனைப் பிடித்தி டாதுகொல்.
|
69 |
| |
|
|
| |
நினதுகீழ்ப்
படிதலை நீதி யாக்கவே
புனிதநீ தாதித்தன் போந்த தாமெனின்
மனிதர க்ஷணையெலா மாநு வேலருட்
டனிதத்தா லன்றுநந் தருமத் தாயவாம்.
|
70 |
| |
|
|
| |
இப்பெரு
மருள்பிடித் திழுக்க வேழைநீ
துப்புர வுளையெனத் துணிந்துன் னீதியாந்
தப்பறைக் கிடங்கரிற் றலைகி ழக்குறக்
குப்புறு கின்றனை கூறக் கேட்டியால்.
|
71 |
| |
|
|
| |
இத்தரை
மனுக்களுக் கிறுத்த தண்டனை
அத்தனை யுஞ்சுமந் தரிய பாடுகள்
உத்தரித் துயிர்ப்பலி யுதவிக் கற்பனை
பத்தையுந் தழுவினர் பரம னோர்சுதன்.
|
72 |
| |
|
|
| |
ஈதுகாண்
மெய்விசு வாச லக்ஷயம்
ஆதலி னிதையுளத் தாக்கி யாண்டகை
நீதியைப் புனைந்திவ ணிலவு வாயெனில்
ஜோதிநாட் டுயர்பதஞ் சொந்த மாமென்றான்.
|
73 |
| |
|
|
| |
இச்சையாம்
புரவியை யிழுத்திங் குய்ப்பதற்
குச்சித கிரியையே கலின முண்மையிற்
குச்சித மாமெனிற் குவல யம்மெலாம்
நிச்சயங் கெடுமென நிறுவ வேண்டுமோ.
|
74 |