பக்கம் எண் :

516

  திங்கள் வாண்முகச் செவ்வியர் செப்பிய
மங்க லத்திரு வாக்கின்ம கிழ்ச்சியுட்
பொங்கி யாரியர் பூரித ராகியுத்
துங்க வேந்தைத்தொ ழுதுட னேகுவார்.

52
   
  குற்ற வாளிக ளாங்கொடி யேமுக்கிங்
கற்ற மில்சுற்சு கானந்த வாக்கம்வந்
தெற்றென் றோர்துமி றையருட் பெற்றியின்
முற்றும் புண்ணியத் தாலென முந்துவார்.
53
   
                 வேறு.
   
  ஆதியான் றூதரை யடுத்திவ் வண்ணமா
வேதிய ரிருவரும் விசும்பி வர்ந்துபோய்
மேதகு நித்திய விமல முத்தியின்
ஜோதிமா நகர்ப்புறந் துன்னி னாரரோ.
54
   
  ஆயிடைத் திருநக ரணிகொள் சேனையின்
மேயவோர் பகுதியுள் வியந்து மேம்படு
தூயரை யெதிர்கொளச் சுலவி விண்ணிடை
ஏயெனு மாத்திரத் திறுத்த தென்பவே.
55
   
  அவ்வயிற் பணிபுரி யறவ ரிவ்விரு
செவ்வியர் தேவனைச் சிநேகித் தாங்கவர்
திவ்வியநா மத்தி னிமித்தந் தீங்குறீஇ
எவ்வகை யுரிமையு மிகந்து ளாரிவர்.
56
   
  மருளுறு மரணநீர் நீந்தி வந்தவர்
திருவுளத் தருள்வழி யழைத்துச் சேறுவேந்
தெருளுறு சந்நிதி சேரு மட்டெனாப்
பொருளெலாம் புலப்படப் புகன்றுகாட்டினார்.
57
   
  ஆரியர் தவநிலை யறிந்தம் முன்னணி
பேருவ கையினொடு வாழத்திப் பெட்புறுஞ்
சீரிய திருமண விருந்திற் சேர்ந்துளார்
சேரிரும் பாக்கிய ரென்னச் செப்பினார்.
58
   
  இறையவன் சந்நிதி நின்று மின்னிசை
மறைதிகழ் மங்கல கீத வாத்தியர்
துறைதொறுந் துறைதொறுஞ் சூழ்ந்து தொக்கனர்
முறைமுறை துந்துபி முழக்கி னாரரோ.
59