பக்கம் எண் :

68

  தீங்கு மல்குநீர் சிறுவர்க்கு நல்லன தெரிந்து
பாங்கி னல்குதிர் மன்பொதுத் தந்தையாம் பரமன்
ஏங்கி நின்றுமன் றாடுமுங் களுக்குள மிரங்கி
ஓங்கு நன்னல மளிப்பரென் பதற்கைய முளகொல். 69
 
  மற்றை யோருமக் குச்செய மனக்கொள்வ தெதுகொல்
அற்ற தேபிறர்க் காக்குநல் லறமென வறிமின்
இற்றி தேநியா யப்பிர மாணமு மேனோர்
சொற்ற பௌஷிக தரிசனங் களுமுண்மை துணியில். 70
 
  ஜீவ பாதையி னிடுக்குறு திருக்கடை சேர்ந்துட்
போவ ரோர்சிலர் பாதையும் புகலரு நெருக்கம்
பாவ மல்கிய பெருவழி கேட்டினுட் படுத்தும்
ஆவ லோடதில் நடப்பவ ரும்பல வனந்தம். 71
 
  ஆட்டுத் தோல்பொதிந் தாருயிர் கவருங்கோ ணாயின்
வீட்டுப் பாதைமற் றீதிதென் றவனிக்கு விளக்கிக்
காட்டிக் கைப்பொருள் கவர்ந்திடு கள்ளப்போ தகர்வாய்க்
கேட்டுக் குட்படா தகலுமின் கிரியையாற் றெளிந்து. 72
 
  வாயி னாலெனைக் கருத்தனே யென்றுபேர் விழுத்தி
ஆயி ரந்தரங் கூவினு மாவதென் னகில
நாய கன்சித்த மறிந்தந்த நடைகடைப் பிடிப்போன்
தூய ராஜ்ஜிய பேரின்பந் துய்ப்பவ னறிமின். 73
 
 

           வேறு

நமரங் காளிங்கு சொற்றவை நம்பிரான்
விமல சித்தவி ளம்பர மாதலில்
சமர பூமித ணந்திந்நெ றிப்படீஇ
அமரர் நாடடை யத்தகு மாய்மினோ. 74

 
  மற்றிவ் வாய்மைம னக்கொடு வானெறி
பற்றி யேகுப வனெவன் பாறைமேல்
கொற்றி வானிட்டு வீடுகு யிற்றிய
குற்ற மற்றவி வேகிகு ணித்திடில். 75
 
  சண்ட மாருதம் வன்மையிற் றாக்கியும்
கொண்டல் மின்னியி டித்துக்கு முறியும்
மண்டு வெள்ளம றிந்துற மோதியும்
விண்டி டிந்துவி ழாதந்த மேனிலை. 76