(பொ
- ரை) முதிர்ந்த கசப்பான தழைகளைச் சாப்பிடுகின்ற
ஒட்டகத்தைப்போல கீழ்மக்கள் நல்ல மார்க்கத்தினின்று நீங்கிய
பாழ்ங்கதைகளைக் கற்றுத் தமது வாழ்நாளை வீணே கழிப்பர்.
புதிதாகிய தேனை நுகருகின்ற வண்டைப்போல புனிதர்கள் ரக்ஷணிய
யாத்திரிகமாகிய இந்த நூல் தமது புத்திக்கு நன்மையைத் தருகின்ற
அமிர்தமென நினைத்து இதைப் புசித்து உள்ளம் மகிழ்வர்.
சிறப்புப்
பாயிரம் முற்றிற்று.
________________________
|
கண்ணியர
க்ஷணியயாத் திரிக மென்னக்
கழறுகின்ற காவியத்தின் பொருள டக்கம்
நண்ணிய தன் வரலாறு மெய்யு ணர்ச்சி
நலத்தகுரு தரிசனமா பரம ராஜ்யம்
புண்ணியவேந் தியல்சிருஷ்டி ராஜ த்ரோகம்
பூர்வவழி சுவிசேஷ புனித மார்க்கம்
எண்ணியரு ணெறிபிடித்த லவநம் பிக்கை
யிலௌகீகங் கடைதிறப்பு மறைவி ளக்கம். 1
|
(பொ
- ரை) மாட்சிமைபெற்ற இரக்ஷணிய யாத்திரிகமென்னக்
கூறுகின்ற காவியத்தின் பொருளடக்கம் யாதெனில்: பொருந்திய அதன்
வரலாற்றுப்படலம், மெய்யுணர்ச்சிப் படலம், நன்மையைத் தருகின்ற குரு
தரிசனப்படலம், பரம ராஜ்ஜியப் படலம், புண்ணிய வேந்தனாகிய
கடவுளினது அரசியற்படலம், சிருஷ்டிப் படலம், ராஜதுரோகப் படலம்,
பூர்வ பாதைப்படலம், பரிசுத்த சுவிசேஷ மார்க்கப்படலம்,
எண்ணிக்கையோடு அருள்நெறியைப் பிடித்தலாகிய யாத்திராரம்பப்
படலம், அவநம்பிக்கைப் படலம், லௌகீகப் படலம், கடை திறப்புப்
படலம், வேத விளக்கமாகிய வியாக்கியானி அரமனைப்படலம்.
|
அருஞ்சுமைநீங்
கியபேறு துயிலு ணர்த்த
லமார்க்கவியல் புஷ்கரிணி யுபாதி யோங்கல்
விரும்புசம்பா ஷணையிரக்ஷை விளைந்த வாறு
விசிராந்தி காட்சிவன மழிம்பன் றோல்வி
நெருங்குமர ணச்சூழல் நிதானி நட்பு
நெறியிலலப் பனைவரைதல் குருவை நேர்தல்
மருங்குமா யாநகரி நகருட் போதல்
மானவர க்ஷணைவகுத்தல் சிறைக்குள் ளாதல்.
2
|
|