| |
கண்டு
பன்முறை கூவின னளியன்கை தவத்தால்
மண்டு காரிருட் சூழலுற் றனன்படு வாதைக்
குண்டு கொன்முடி வாற்றுகிற் கிலனுயிர்க் கிறுதி
தண்ட லில்பெருங் காதலிற் றேடுவன் றமியேன். |
145 |
| |
|
|
| |
சாவு
மின்றொவோர் கணந்தொறும் வேதனை தழைப்ப
நோவு மல்கிவெய் துயிர்துடித் துயங்குவ னோலேன்
வீவின் றாகிய வுயர்பதம் பெறுதவம் விளைத்தோய்
பாவி யான்புகல் விண்ணப்பம் பரிந்துகேட் டருடி. |
146 |
| |
|
|
| |
ஐய
தீயனே னாக்குளி ரத்தகு மளவில்
கையி னோர்விரற் கடைநுனி கங்கையிற் றோய்த்துத்
துய்ய லாசரு விவண்டா விடுத்தருள் சுரத்தி
மெய்ய தாகிய சுகிர்தமுண் டுனக்கென விண்டான். |
147 |
| |
|
|
| |
மைந்த
கேட்டியுன் னற்பயன் வையகத் தடைந்தாய்
அந்த வாறுதன் றீப்பய னுகர்ந்தன னாங்கே
இந்த லாசரு வீண்டிர க்ஷணியவீ டிசைந்தான்
நொந்து தீப்பய னுகர்தியீண் டித்திற நுணித்தி. |
148 |
| |
|
|
| |
நன்மை
வித்தியோர் நற்பயன் றுய்ப்பது நயந்து
தின்மை வித்தியோர் தீப்பய னுகர்வதுந் தேரில்
தன்ம வித்தக தைவிக சருவலோ கேசன்
கன்ம நாடியங் கவரவர்க் கூட்டிடுங் கணக்காம். |
149 |
| |
|
|
| |
ஈசன்
சித்தமே சாதன மெம்மனோர் செயற்குப்
பேச வேறிலை யன்றியிப் பெரும்பிள வுருவி
நாச வல்லிருட் சூழலை நாடுவ தெங்ஙன்
ஆசை யற்கவென் றுரைத்தன னறவனா பிரகாம். |
150 |
| |
|
|
| |
இரவெ
னக்கினி விடிவதின் றெனினுமென் கிளைஞர்
உரவு நீணிலத் துளர்சிலர் மெய்யுணர் வொருவி
வரவ டுப்பினு மடுக்குமிச் சூழலை மரபிற்
புரவு ணர்த்தலா சரையவண் போக்குக வெந்தாய். |
151 |
| |
|
|
| |
செய்த
குற்றமு நீதியும் வருநடுத் தீர்ப்பும்
உய்தி றத்தநூல் வழியுமற் றீதிதென் றுலகில்
கைதி கழ்த்துநெல் லியிற்றினங் காட்டுமோ சேயும்
மெய்தி கழ்த்துபஃ றீர்க்கரு முளரென்றி மேலோய். |
152
|