பக்கம் எண் :

சீறாப்புராணம்

1080


இரண்டாம் பாகம்
 

2904. மிகுமதி யுதுமா னென்பவ ருறூமிப்

          பதியினின் மேவிநல் லறிவின்

     பகுமனத் தறிவோர்க் குரைத்துமங் கவர்க

          டெரிந்தநூல் படிப்படி கேட்டும்

     முகம்மது நபியாய் வருவரங் கவர்த

          மார்க்கமே மார்க்கமென் றோதி

     யிகலறு மந்நாட் டரசனுக் குவந்த

          வியன்மறைப் பெரியரா யிருந்தார்.

13

      (இ-ள்) அன்றியும், மிகுந்த அறிவையுடைய உதுமா னென்பவர் உறூ மிராச்சியத்திற் போய்ச் சேர்ந்து நல்ல அறிவோடும் பகுந்த மன வுணர்ச்சியை யுடையவர்கட்குத் தமது மனதின் கண்ணுள்ளவைகளைக் கூறியும் அவ் விடத்தில் அன்னவர்கள் படித்த கிரந்தங்களினது அறிவுகளை ஒழுங்கொழுங்காய்க் கேள்வி யுற்றும் முகம்ம தென்பவர் நபியாக இவ் வுலகத்தின் கண் வருவார். அவ்விடத்தில் அந்த முகம்ம தென்பவரின் மார்க்கமே மார்க்க மாகுமென்று சொல்லிச் சத்துருத்துவ மற்ற அந்த றூம் இராச்சியத்தினது மன்னவனுக்கு விரும்பிய இயல்பினை யுடைய வேதப் பெரியோராக இருந்தார்.

 

2905. பெருக்குநல் லறிவி னுபைதுல்லா வென்னும்

          பெயரினர் காண்டலின் பொருட்டாற்

     றருக்கொடுந் தெளிந்து மெண்ணிறந் தனைய

          சாத்திரங் கற்றுவல் லவரா

     யிருக்குநற் றவர்பால் வினவியுங் கணிதத்

          தியலினான் மதித்துமே தேடித்

     திரைக்கடற் புடவித் திசையினிற் பதிக

          டொறுந்தொறு மினந்திரி கின்றார்.

14

      (இ-ள்) அன்றியும், வளர்க்கா நிற்கும் நல்ல அறிவை யுடைய உபை துல்லா வென்று சொல்லும் அபிதானத்தை யுடையவர் தங்களைப் பார்க்க வேண்டு மென்ற காரணத்தினால் களிப்புடன் தேர்ந்தும் கணக்கற்ற சாத்திரங்களைப் படித்து வல்லவர்களாயிருக்கின்ற நன்மை பொருந்திய தவத்தை யுடையவர்களினிடத்திற் கேட்டுங் கணித சாஸ்திரத்தினது இயல்பினாற் குறிப்பிட்டும் இன்னம் அலைகளைக் கொண்ட சமுத்திரத்தையுடைய இந்தப் பூமியினது திக்குகளிலுள்ள நகரங்களெல்லாவற்றிலும் விசாரித்துத் திரிகின்றார்.

 

2906. இவ்வணந் திரிந்து தேடின பெரியோ

          ரெண்ணில ரிஃதெலா மறிந்து

     மைவணக் கவிகை முகம்மது மதீனா

          நகரினில் வருகுவ ரென்னச்