பக்கம் எண் :

சீறாப்புராணம்

1097


இரண்டாம் பாகம்
 

மதீனமா நகரத்திற் போய்ச் சேர்ந்து வளைந்த கீர்த்தியுடன் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தைக் காத்துத் தங்கியிருக்கின்ற காலத்தில் பிரகாசியா நிற்கும் சகுபா னென்று தோன்றிய மாதத்தில்.

 

2956. மிக்கநற் றேதிமூ வைந்தின் மேவிய

     தக்கசெவ் வாயினி லுகறு நேரத்தில்

     அக்கனை யிரண்டிறக் ஆத்துத் தான்றொழு

     தொக்கலோ டிசைநபி யுறையு மொல்லையில்.

4

      (இ-ள்) மேலான நன்மையைக் கொண்ட தேதி யானது பதினைந்திற் பொருந்திய தகுதியைப் பெற்ற செவ்வாய்க் கிழமை யன்று லுகறு நேரத்தில் கீர்த்தியை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் உறவினரான அசுஹாபிமார்க ளோடும் அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை இரண்டு றக்ஆத்து வணங்கி யிருக்குஞ் சிறு சமயத்தில்.

 

2957. நிரைமணித் தடச்சிறை யொடுக்கி நீள்கதிர்

     விரிதரு வெள்ளிடைப் படர்ந்து வேதநூ

     லுரைதருந் திருநபி யிடத்தி னோர்நொடி

     வரையினில் சபுறயீல் வந்துற் றாரரோ.

5

      (இ-ள்) ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் வரிசை யாகிய இரத்தினங்களைக் கொண்ட தங்களின் பெரிய சிறகுகளை யொடுக்கி ஓர் நொடியளவில் நீண்ட பிரகாசமானது பரவா நிற்கும் ஆகாயத்தின் கண் நடந்து வேத சாஸ்திரங்களைக் கூறுகின்ற தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களி னிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

2958. இறையவன் ககுபத்துல் லாவென் றெய்திய

     துறவுயர் பள்ளியை நோக்கித் தான்றொழ

     மறையுரை வழங்கின னென்ன மன்னபி

     முறையிதென் றானந்தக் கடலின் மூழ்கினார்.

6

      (இ-ள்) அவ்வாறு வந்து இறைவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் கஃபத்துல்லா வென்று பொருந்திய துறவினால் மேன்மைப் பட்ட பள்ளியைப் பார்த்து வணங்கும் வண்ணம் வேத வசனத்தைக் கற்பித்தா னென்று கூற, நபிகட் பெருமானாரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இதுவே ஒழுங்கான தென்று சந்தோஷ சாகரத்தில் அமிழ்ந்தினார்கள்.