பக்கம் எண் :

சீறாப்புராணம்

1099


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) கெற்பத்தைக் கொண்ட மேகங்களானவை சஞ்சரிக்கப் பெற்ற மலைகளினது சுருள்க ளெல்லாவற்றையும் தேவர்க ளான மலாயிக்கத்து மார்களின் அதிபதியாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் அவ்வாறு பூமியினிடத்து மாள்வித்ததினால் இப் பூமியின் கண் ஓங்கிய கஃபத்துல்லாவும் ஆபரண மென்று கூறா நிற்கும் கத்தூரி வாசனை யானது தங்கப் பெற்ற நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் நேத்திரங்களுக்குத் தெரிய லாயிற்று.

 

2963. மதிதவழ் நெடுங்கொடி மதீன மாகிய

     பதியினி லமைத்தவப் புதிய பள்ளியை

     நிதிமதிட் ககுபத்துல் லாவி னேரதாய்

     விதியொடுந் திரித்துப்பின் விளங்கக் கட்டினார்.

11

      (இ-ள்) அவ்வாறு தெரிய, சந்திர னானது தவழா நிற்கும் நீண்ட துவசங்களையுடைய மதீன மாகிய திரு நகரத்தி னிடத்துக் கட்டிய அந்த நூதனமான பள்ளியைப் பொன்னினா லாகிய மதிற்களைக் கொண்ட கஃபத்துல்லா வென்னும் பள்ளிக்கு நேராக வேதாகம முறையோடும் மாற்றிப் பின்னர் விளங்கும் வண்ணங் கட்டி முடித்தார்கள்.

 

2964. இருசுடர் விலங்கிட விலங்கு நீள்கொடி

     நிரைதரும் பள்ளியை நோக்கி நீணபி

     யொருவனைத் தொழுதிரந் துவக்குந் திங்களிற்

     றெரிதரும் புதுமையொன் றெடுத்துச் செப்புவாம்.

12

      (இ-ள்) அவ்வித முடித்து ஒளி வோடு கூடிய நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சந்திர சூரியர்கள் விலகிச் செல்லும் வண்ணம் பிரகாசிக்கின்ற நீண்ட துவசங்களை வரிசை யாகக் கொண்ட கஃபத் துல்லா வென்னும் பள்ளியைப் பார்த்து ஒப்பற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை வணங்கி வேண்டி விரும்பா நிற்கும் மாதத்தில் விளங்கிய ஓ ராச்சரியத்தை யா மெடுத்துக் கூறுவாம்.