பக்கம் எண் :

சீறாப்புராணம்

1178


இரண்டாம் பாகம்
 

3193.  புத்தமு துகளும் வாயும் புதுமதி முகமுஞ் சேர்ந்த

     கொத்தலர்க் குழலுஞ் செம்பொற் குவிமலைச் சுணங்கு நூலி

     னெய்த்தசிற் றிடையுங் காந்தி வளைநிரைத் தெடுத்த கையின்

     வைத்தொரு கிளியு மேந்தி மங்கைய ளொருத்தி வந்தாள்.

153

      (இ-ள்) அன்றியும், புதிய அமுத மானது குதிக்கா நிற்கும் வாயையும், நூதனமாகிய சந்திரனை நிகர்த்த வதனத்தையும், கொத்துக்களைப் பொருந்திய புஷ்பங்களை யுடைய கூந்தலையும், சிவந்த பொன்னை நிகர்த்த திரண்ட முலைகளினது தேமலையும், பஞ்சினாற் செய்யப்பட்ட நூலைப் பார்க்கிலும் மெலிந்த சிறிய இடையையும், பிரகாசத்தைக் கொண்ட வளையல்களை நிரைத்துயர்த்திய கையினிடத்து வைத்த ஒரு கிளியையுந் தாங்கி மங்கைப் பருவத்தை யுடையவளான ஒரு பெண் ணானவள் வந்தாள்.

 

3194. வள்ளறன் வதன நோக்கி மதிமயக் குற்றுக் காம

     முள்ளுறுந் தீயான முத்தஞ் சுடச்சுட வொருங்கு சிந்திக்

     கள்ளவிழ் கோதை நல்லீர் கதிர்மணி முத்த மென்ப

     தெள்ளள வெனினும் பூணா தெறிமின்க ளெறிமி னென்றாள்.

154

      (இ-ள்) அவ்விதம் வந்து வள்ளலாகிய அவ் வலி றலி யல்லாகு அன்கு அவர்களின் முகத்தைப் பார்த்து அறிவானது கலக்க முறப் பெற்று மனதின் கண் பொருந்திய காம மாகிய அக்கினியால் தான் அணிந்திருந்த முத்தங்க ளானவை மிகவுஞ் சுட, அவைகளை ஒருங்கு சிதறி மது வானது அவிழப் பெற்ற மாலையை யுடைய பெண்களே! நீங்கள் பிரகாசத்தைக் கொண்ட முத்து மணிக ளென்பதை எள்ளள வேனும் அணியாமல் எறியுங்கள்! எறியுங்கள்!! என்று சொன்னாள்.

 

3195. வாரறுந் தெழுந்து வீங்கும் வனமுலைப் பூணுஞ் சாந்துங்

     கூரயில் பொருது நீண்ட கொடிவரி விழியின் மையுங்

     காரெனத் திரண்ட கூந்தற் காட்டினில் வரிவண் டார்ப்பப்

     பேரணி மடந்தை யென்னுங் பெண்கொடி யொருத்தி வந்தாள்.

155

      (இ-ள்) அன்றியும், இரவிக்கையை யறச் செய்து எழும்பி விம்மா நிற்கும் அழகிய முலையின் கண்ணுள்ள ஆபரணங்களும் வாசனைத் திரவியங்களும், கூர்மை தங்கிய வேலாயுதத்தை யொத்த நீட்சியைக் கொண்ட இரேகைகளை யுடைய கண்களில் தீட்டிய மையும், பெரிய அணியாக மேகத்தைப் போலுந் திரட்சி யுற்ற குழலாகிய வனத்தின் கண் வரிகளை யுடைய வண்டுகள் ஒலிக்கும் வண்ணம் பெரிய அழகை யுடைய மடந்தை யென்று சொல்லும் பெண்களில் கொடியான ஒரு பெண்ணானவள் வந்தாள்.