பக்கம் எண் :

சீறாப்புராணம்

1215


இரண்டாம் பாகம்
 

3302. அறைதவில் பம்பை தடாரி யார்த்தெழ

     முறைமுறை காகள முழக்க மோங்கிட

     மறுவறும் வெண்கொடி யுலவி வள்ளலார்

     சிறியதந் தையர்முனஞ் செல்லச் சென்றனர்.

7

      (இ-ள்) அவ்வா றெழும்பி அடிக்கின்ற தவில்களும் பம்பைகளும், பேரிகைகளும் ஒலித் தோங்கவும், எக்காளத்தின் ஓசையானது வரிசை வரிசையாகப் பெருகவும், குற்றமற்ற வெண்ணிறத்தைக் கொண்டதுவஜ மானது உலாவி தங்களின் சிறிய பிதாவான ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்களின் முன்னாற் செல்லவும், வள்ளலாராகிய நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சென்றார்கள்.

 

3303. உள்ளகங் களித்தமு சாவென் றோதிய

     வள்ளல்வெண் கொடியுடன் மகிழ்ந்து முன்செலப்

     புள்ளினு நனிவிசைப் புரவி சூழ்வரக்

     கள்ளவிழ் மலர்ப்பொழில் கடந்து போயினார்.

8

      (இ-ள்) அவ்வாறு ஹமுசா றலி யல்லாகு அன்கு என்று சொல்லப்பட்ட வள்ள லானவர்கள் மனத்தினுள் மகிழ்ச்சியடைந்து வெண்ணிறத்தைக் கொண்ட துவஜத் தோடுங் களித்து முன்னாற் செல்லவும், பட்சிகளைப் பார்க்கிலும் மிகுந்த விரைவைக் கொண்ட குதிரைப் படையானது தங்களைச் சூழ்ந்து வரவும், மதுவை நெகிழப் பெற்ற புஷ்பங்களை யுடைய சோலைகளைத் தாண்டிச் சென்றார்கள்.

 

3304. அடவியும் பாலையு மருவிக் குன்றமுங்

     ணூடகரி வனங்களுங் கடந்து போயிகல்

     படுகொலை மருவலர் நடத்தும் பாதையி

     னிடனசீ றாவெனுந் தலத்தி னெய்தினார்.

9

      (இ-ள்) அவ்வாறு சோலைகளையும் பாலை நிலங்களையும் அருவிகளை யுடைய மலைகளையும் மதத்தைக் கொண்ட யானைகளை யுடைய காடுகளையுந் தாண்டிச் சென்று விரோதத்தைப் பொருந்திய கொலைத் தொழிலையையுடைய சத்துராதிகளான அக்காபிர்கள் தங்களின் வாகனங்களை நடத்திச் செல்லும் மார்க்கத்தி னிடமாகிய அசீறா வென்று சொல்லுந் தானத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3305. வற்றுறாப் பெரும்புகழ் மக்க மாநகர்

     பற்றலர் சாமினுக் கேகும் பாதையிற்

     சுற்றினு மிறங்கின சுருதி வாசகக்

     கொற்றவ னபியொடும் படைக்கு ழாங்களே.

10