பக்கம் எண் :

சீறாப்புராணம்

1345


இரண்டாம் பாகம்
 

ளைந்நூற்றில் வரியைக் கொண்ட புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது முறைமையில் ஒழுங்காக நானூறு ஒட்டகங்களையும் இனிமையோடுங் கொடுத்து மற்ற நூறு ஒட்டகங்களையும் அன்புடன் தங்களது கைவசத்திலாக்கிக் கொண்டார்கள்.

 

3676. கோதுறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்க ளெல்லா

     மாதவ தீனர்க் கீந்து வானவர் பரவி வாழ்த்தத்

     தீதறச் செல்வ மோங்கச் செழுமறை நாளும் பொங்க

     வாதிதன் கிருபை தாங்கி யகுமது விருந்தா ரன்றே.

12

      (இ-ள்) அன்றியும், அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் குற்றத்தைப் பொருந்திய சத்துராதிகளான அந்தக் காபிர்களது ஊராகிய அக்குதிரியென்னும் நகரத்தின் கொள்ளையின் முதல்களெல்லாவற்றையும் மகா தவத்தைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடையவர்களான அசு ஹாபிமார்களுக்குக் கொடுத்துத் தேவர்களான மலாயிக்கத்து மார்கள் வணங்கித் துதிக்கவும், செல்வமானது களங்கமறப் பெருகவும், செழிய புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது பிரதிதினமும் எவ்விடத்தும் பொலியவும், யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் காருண்ணியத்தை ஏற்றிருந்தார்கள்.