|
இரண்டாம் பாகம்
புரிந்த புண்ணியமானவரே!
அழகிய நல்ல சமாச்சாரமாக நான் சொல்லிய வார்த்தைகளைத் தடுத்தீர். தீமையானது வந்து
சேருமென்பதையு முணராது போனீர். வீணாக மாண்டீர். ஏழையாகிய யான் ஏகாந்தமானே னென்று சொல்லியழுதாள்.
4121.
இன்னன புலம்பு மெல்வையிற் கேளி
ரியாவருந் திரண்டிவ ணீண்டிக்
கன்னியே வரலா றேதெனக் கேட்பக்
கழறின ளுற்றவை யனைத்து
மன்னவ ரெவரு மதிசயித் துரிய
வாரண விதிப்படி யரிதின்
மின்னனா ளிரங்க வெடுத்தடக் கினர்மேல்
வெய்யவன் குணதிசை யெழுந்தான்.
70
(இ-ள்) அவள் இத்தன்மையாக
அழுது கொண்டிருந்த சமயத்தில் அவளது பந்துக்க ளனைவரு மொன்று சேர்ந்து இவ்விடத்தில் வந்து கூடிக்
கன்னிப் பருவத்தை யுடைய மாதே! இங்கு நடந்த வரலாறு யாது? என்று கேட்க, அவளும் அங்குப் பொருந்திய
சமாச்சாரங்களி யாவற்றையுஞ் சொன்னாள். அரசர்களான அவர்களி யாவரும் அச்சமாச்சாரங்களைக்
கேள்வியுற்று ஆச்சரியமடைந்து தங்களுக்குச் சொந்தமான வேத நியமப் பிரகாரம் மின்போலு மிடையை
யுடைய அவள் அழும் வண்ணம் அவனை அருமையோடு மெடுத்து அடக்கஞ் செய்தார்கள். அதன் பின்னர்ச்
சூரியனானவன் கீழ்த்திசையி லுதயமானான்.
4122.
கதமுறு வென்றிக் களிறெனுந் திறல்சேர்
முகம்மது கபீபுசெங் கமலப்
பதமலர் தொழுது வினையமுண் ணிறைந்த
பாதகக் ககுபினை யிரவின்
வதைசெயுங் கபட மொழிமுறை யுரைப்ப
வரும்பெரும் பகைமுடிந் தனவென்
றிதயமுள் ளுவந்து மணிபல தூசோ
டிருநிதி யீந்தன ரன்றே.
71
(இ-ள்) கோபத்தைப்
பொருந்திய விஜயத்தைக் கொண்ட யானையென்று சொல்லும் வலிமையுற்ற அந்த முகம்மது றலியல்லாகு
அன்கு அவர்கள் ஹபீபென்னுங் காரணப் பெயரை யுடைய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல்
|