பக்கம் எண் :

சீறாப்புராணம்

1515


இரண்டாம் பாகம்
 

உசைனார் பிறந்த படலம்

 

கலிநிலைத் துறை

 

4158.  வந்த தெண்ணிய கிசுறத்து நான்கெனும் வருடஞ்

     சிந்தை கூர்தரக் கசுறெனுந் தொழுகையைச் செய்த

     லெந்த நாட்டினு மேகுவோர் மேல்பறு லென்ன

     வந்த மில்லவ னாரண மிறங்கின வன்றே.

1

      (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் திருமக்கமா நகரத்தை விட்டுந் திருமதீனமா நகரத்திற்கு வந்ததான கணக்கிட்ட ஹிஜிறத்து நான்கென்று சொல்லும் வருடத்தில் மனமானது மகிழ்ச்சி யடையும்படிக் கசறென்று சொல்லுகின்ற தொழுகையைத் தொழுதல் எல்லா நகரங்களுக்கும் பிரயாணமாகப் போகப்பட்டவர்கள் மீது பறுலென்று முடிவுற்றவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் புறுக்கானுல் கரீமென்னும் வேதவசன மிறங்கிற்று.

 

4159.  கூறு மவ்வரு டந்தனிற் குலஅபூ வுமையா

     பேறி னால்வரும் பேதைய ரும்முசல் மாவை

     மீறு மாரண விதிப்படி தீனவர் வியப்ப

     வீறி லானபி திருமண முடித்தன ரியைந்தே.

2

      (இ-ள்) துதிக்கா நிற்கும் அந்த வருடத்தில் முடிவில்லாதவனான ஜல்லஷகுனகுவத்த ஆலாவின் நபியாகிய நமது நாயகம், எம்மறைக்குந் தாயகம், செய்யிதுனா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விளங்கா நிற்கும் அபூவுமையாறலியல்லாகு அன்கு அவர்களது வரத்தினால் இவ்வுலகத்தின் கண் அவதரித்து வந்த கன்னியான உம்முசல்மா றலியல்லாகு அன்ஹா அவர்களைப் பொருந்தி யோங்கா நிற்கும் புறுக்கானுல் மஜீதென்னும் வேதநியமப் பிரகாரம் தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தையுடைய சஹாபாக்கள் புகழும் வண்ணம் அழகிய விவாக முடித்தார்கள்.

 

4160.  பின்னு மவ்வரு டஞ்சகு பானெனப் பேசு

     மன்ன திங்களிற் றேதியோ ரைந்தினி லழகார்

     மின்னு பூணணி பாத்திமா வயிற்றினில் விளங்கி

     யுன்னு காரணத் துடனுசை னார்நிலத் துதித்தார்.

3