இரண்டாம் பாகம்
அபிமானமற்றவர்கள். ஈனமே
யோங்கா நிற்கும் வஞ்சகத்தைக் கொண்ட இதயத்தை யுடையவர்கள். ஒருவருக்கும் பணியாதவர்கள்.
4299.
இத்தகைமை பூண்டுநந்தத் தீனோருக்
கிடுக்கணிலை யியற்றி நாளுஞ்
சத்துருவா மெனவிருந்தா ரிங்கிதனை
யறிமினெனச் சாற்ற லோடும்
பத்திபெற நிறைமனத்திற் கொண்டுகளிப்
புறமகிழ்ந்து பரிவி னோடு
மத்திரியு மள்ளரொடு மன்னவரு
மெழுகவென வறைந்திட் டாரால்.
5
(இ-ள்) அவர்கள் இவ்விதத்
தன்மையை யணிந்து நமது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்களுக்குத்
துன்பமாகிய முறைகளைச் செய்து பிரதி தினமும் விரோதிகளென்று சொல்லும் வண்ண மிருந்தார்கள்.
இவ்விடத்தில் இச்சமாச்சாரத்தைத் தெரிந்து கொள்ளுங்க ளென்று சொன்ன வளவில், அதை அந்நபிகட்
பெருமானா ரவர்கள் வரிசையாகத் திடத்தைக் கொண்ட தங்களிதயத்தின்கண் கொண்டு மகிழ்ச்சியானது
பொருந்தும் வண்ணம் சந்தோஷித்து அன்போடும் குதிரைகளும் வீரர்களுடன் அரசர்களு மெழும்புங்க
ளென்று கட்டளை செய்தார்கள்.
4300.
ஆரணத்தின் முறைதவறா வபாதற்றுல்
கப்பாறை யளவிலாத
தோரணவண் மறுகுதரு மதீனநகர்க்
காதியெனத் தோன்ற நாட்டிப்
பூரணவெண் மதியனையோர் கரைபோட்டுப்
பார்ப்பவினை பொருவி லாத
காரணத்தி னின்றதவ ஆயிசா
வுடன்போகக் கண்ட தன்றே.
6
(இ-ள்) அவ்வாறு கட்டளை
செய்து புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது ஒழுங்கில் நின்றும் வழுவாத அபாதற்றுல் ஹப்பாறு றலியல்லாகு
அன்கு அவர்களைக் கணக்கற்ற தோரணங்களைக் கொண்ட வளமை பொருந்திய வீதிகளையுடைய அந்தத் திருமதீனமா
நகரத்திற்கு அரசரென்று தோன்றும்படி நிறுத்தி வெண்ணிறத்தை யுடைய பூரணச் சந்திரனைப் போன்ற
மாதர்கள் கரைபோட்டுப் பார்க்கும் வண்ணம் செய்கையினா லொப்பற்ற காரணத்தோடு நின்ற தவத்தைப்
பெற்ற ஆயிஷாறலி யல்லாகு அன்ஹா அவர்களோடு செல்லும்படி நேர்ந்தது.
|