இரண்டாம்
பாகம்
காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
தங்களுக்கு அவ்வாறு வந்த வேத வசனத்தின் செய்தியினது
வகையானது இதுவென்று மனமகிழ்ந்து சொல்ல, மேலான
கீர்த்தியையுடைய அசுஹாபிமார்கள் அதைக்
கேள்வியுற்றுத் தங்களிதயத்தின் கண் யாவருக்கும்
பெரியவனான அல்லா ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவைப் புகழ்ந்து
அப்பால் அந்நபிகட் பெருமான் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்களை வாழ்த்திப் பெருமை பொருந்தும் வண்ணந்
தங்கள் தங்களுக்குச் சொந்தமான வீடுகளிற் போய்ச்
சேர்ந்தார்கள்.
|