பக்கம் எண் :

சீறாப்புராணம்

201


முதற்பாகம்
 

புனல் விளையாட்டுப் படலம்.

 

கலிவிருத்தம்

 

482. அலத்தக மலர்ப்பதத் தாமி னாவெழிற்

    சிலைத்தடப் புயமுகம் மதுமெய்ச் சீர்பெறக்

    கலைத்தட மதியென வளரக் கண்டுறு

    நலத்தகு கண்களித் திருக்கு நாளினில்.

1

     (இ-ள்) செம்பஞ்சூட்டிய தாமரை மலர்போலும் பாதங்களையுடைய ஆமினா அவர்கள் அழகிய மலைபோலும் விசாலமான புயங்களையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் தங்கள் சரீரமானது சிறப்புப் பொருந்தும்படி கிரணங்களையுடைய பெருமை தங்கிய சந்திரனைப் போல நாளுக்குநாள் வளருவதைப் பார்த்து நன்மையான கண்களானவை பொருந்தும்படி களிப்புற்றிருக்கும் நாளினில்.

 

483. பொறிநிக ராமினா வென்னும் பூங்கொடி

    யறிவக முகம்மதைக் கூட்டி யாதிநூ

    னெறிதரு மக்கமா நகரை நீங்கியே

    செறிவள மதினமா நகரிற் சென்றனர்.

2

     (இ-ள்) முண்டகாசனையைப் போன்ற ஆமினாவென்று சொல்லும் பூவானியன்ற கொடியானவர்கள் அறிவு தங்கிய அகத்தினையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைக் கூட்டிக் கொண்டு யாவற்றிற்கு முதன்மையான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் வேதசாஸ்திரங்களினது சன்மார்க்கத்தைத் தராநிற்கும் திருமக்கமா நகரத்தை விட்டும் பிரயாணமாகிச் செல்வமானது நிறையப் பெற்றத் திருமதீனமா நகரத்திற்போய் சேர்ந்தார்கள்.

 

484. தன்னுயி ரனையமுன் னவரிற் சார்ந்தார்

    பொன்னடி வணங்கிய பொருவி றங்கையை

    யென்னுயி ரென்னுயி ரெனத்தழீ இக்குல

    மன்னுயிர் முகம்மதை யெடுத்து வாழ்த்தினார்.

3

     (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்து தங்கள் ஜீவனைப் போன்ற தமையன்மார்களின் வீட்டையடைந்து அவர்களது அழகிய