பக்கம் எண் :

சீறாப்புராணம்

245


முதற்பாகம்
 

கதீஜாவென்னும் திருநாமத்தையுடைய பெண்ணுக் குவமையாகப் படா முடிகளையும் விஷத்தினையுமுடைய ஆதிசேடனாற் றாங்கப்பட்ட இந்தப் பூலோகத்தின்கண் குணமுற்ற சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த வல்லவர்களாலும் மதிப்பிட்டு எடுத்துச் சொல்லுதற்கு அரிதாகும்.

 

615. மின்னென வொளிம றாத விளங்கிழை கதிசா வென்ன

    மன்னிய பொருளின் செல்வி மனையகத் தினினா டோறு

    மின்னணி நகர மாக்க ளியாவரு மினிது கூறப்

    பொன்னனி வாங்கித் தேச வாணிபம் பொருந்தச் செய்வார்.

19

     (இ-ள்) யாவர்களும் இன்பமாகச் சொல்லும் வண்ணம் இந்த அழகிய மக்கமா நகரத்திலுள்ள மனுஷியர்கள் மின்னைப் போலும் பிரகாசமானது நீங்காத ஒளிர்கின்ற ஆபரணங்களையுடைய அக்கதீஜாவென்று சொல்லும் பொருந்திய சம்பத்துக்களைப் பெற்ற செல்வத்தையுடையவரது வீட்டின்கண் பிரதிதினமும் சென்று திரவியங்களை மிகவாக வாங்கி மற்றும் தேசங்களுக் கிசைந்த கச்சவடத் தொழில்களைப் பொருந்தும்படி செய்வார்கள்.

 

616. கலைத்தடக் கடலே யெந்தங் கண்ணிரு மணியே யாமு

    மலைத்தடக் கடற்கட் பாவை யணிமனை யடுத்துச் செம்பொ

    னிலைத்திட நினைத்து வாங்கி நெறிநெடுந் தூர மெல்லாந்

    தொலைத்திவண் புகுவம் வல்ல தொழின்முடித் திடுவ மென்றே.

20

      (இ-ள்) ஆதலினால் பெருமை பொருந்திய சாஸ்திரங்களின் சமுத்திரமானவரே! எமது இரண்டு கண்களிலுமிருக்கின்ற மணியானவரே! நாமும் நிலைபெறும்படி யோசித்து அலைகளைப் பெற்ற பெரிய கடற்போலுங் கண்களையுடைய பாவையான அந்தக் கதீஜா வென்பவரின் அழகிய வீட்டில் நெருங்கிச் சிவந்த திரவியத்தை வாங்கி நீண்ட பாதைகளையுடைய தூரதேசங்களை யெல்லாந் தொலைத்துத் திரும்பி இங்கு வந்து சேருவோம்; வலிமையான தொழில்களை முடித்திடுவோமென்ன.

 

617. தீனகக் குளந்த டாகந் திசைதொறு நிறைந்து தேக்க

    வானதிப் பெருக்கை யொப்ப வருமுகம் மதுவை நோக்கித்

    தூநகை முறுவல் வாய்விண் டுரைத்தனர் சொன்ன மாரி

    யானென வுதவுஞ் செங்கை யருளெனுங் கடலி னாரே.

21

     (இ-ள்) தீனாகிய அக்குளங்களும் தடாகங்களும் திசைகளெல்லாவற்றிலும் நிறைவுற்றுத் தியங்கும்படி வராநிற்கும் பரிசுத்தமான ஆற்றினது பெருக்கைப் போன்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைப் பார்த்துத் துய்தான