பக்கம் எண் :

சீறாப்புராணம்

297


முதற்பாகம்
 

புலிவசனித்த படலம்

                 

கலிநிலைத்துறை

 

754. படர்ந்த தெண்டிரைப் பெருக்கெடுத் தெறிநதிப் பரப்பைக்

    கடந்து கான்பல கடந்தரு நெறிசெலுங் காலை

    கொடுந்த டக்கரித் திரளெனுங் குழுவினு ளொருவ

    னடைந்து சீரகு மதினடி தொழுதறை குவனால்.

1

     (இ-ள்) பரவிய தெள்ளிய அலைகளினது பெருக்கை எடுத்து இருகரைகளிலும் வீசாநிற்கும் அவ்வாற்றினது பரப்பைத் தாண்டிப் பலகாடுகளையுங் கடந்து அரிதான பாதையுடன் நடந்து போகின்ற சமயத்தில், கொடுமைதங்கிய பெரிய யானைக் கூட்டமென்று செல்லாநின்ற அக்கூட்டத்தினகம் ஒரு மனிதன் வந்து சிறப்பினையுடைய அகமதென்னுந் திருநாமம் பெற்ற நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருவடிகளை வணங்கிச் சொல்லுவான்.

 

755. நிகழுந் தாரையிற் காவதத் துள்ளுறை நெடுநீ

    ரகழி போன்றவோ ரோடையுண் டதனினுக் கணித்தாய்ப்

    புகலு தற்கரி தடவியுண் டவ்வுழிப் பொருந்தி

    யுகளு மாங்கொரு பாதகக் கொடுவரி யுழுவை.

2

     (இ-ள்) நாம் நடக்குகின்ற இப்பாதையின்கண் ஒருகாதவழித் தூரத்தினகம் சலத்தினையுடைய நெடிய அகழிபோன்ற ஓரோடையானதுண்டு. அதற்குச் சமீபமாய்ச் சொல்லுதற்கரிய ஒரு காடுண்டு. அவ்விடத்தில் பொருத்தமுற்றுப் பாயாநிற்கும் துரோகத்தையுடைய கொடிய இரேகைகள் படர்ந்த ஒரு புலியானது.

 

756. நீண்ட வானிலம் புடைத்திடக் கிடந்துட னிமிர்ந்து

    கூண்ட கான்மடித் திருவிழி கனல்கள் கொப்பிளிப்பப்

    பூண்ட வெள்ளெயி றிலங்கிட வாய்புலால் கமழ

    வீண்டு முட்செறி வனத்திடை சினத்தொடு மிருக்கும்.

3

     (இ-ள்) தனது நீட்சியுற்ற வாலினால் பூமியின்மீது அடித்திடவும், சரீரமானது நிமிர்தலுற்றுச் சேர்ந்த நான்கு கால்களையும் மடித்துத் தரையின் மேல்படுத்து இரண்டு கண்களும்