| 
 முதற்பாகம் 
  
வண்ணம் ஊன்றிப்
பார்த்து அச்சபையானது பயங்கர மடையும்படி மலைகளும் நடுங்கிடும் மிகுத்த வலிமையை யுடைய எனது
தோள்கள் இற்றதா? இறவில்லை யென்று சொன்னார். 
  
1513. 
புதிய வேதமொன்
றுளதெனும் படிறுரை புகன்றிப் 
     பதியி
லுள்ளவர்க் கருங்களை யெனப்பகை விளைத்த 
     மதுகை மன்னவன்
முகம்மதி னுடல்வதைத் திடும்வா 
     ளிதுகொல் காணுதி
நீவிரென் றடலும றெழுந்தார். 
11 
      (இ-ள்)
அவ்வாறு சொன்ன வெற்றியை யுடைய உமறென்பவர் தனக்கு நூதனமான ஒரு வேதமுண்டு மென்றும்
பொய்மையாகிய வார்த்தைகளைச் சொல்லி இந்தத் திருமக்கமா நகரத்தின் கண்ணுள்ளவர்களுக்கு
அரிய களையைப் போல விரோதத்தை யுண்டாக்கிய வலிமையை யுடைய அரசனான முகம்மது என்பவனின்
சரீரத்தைக் கொல்லா நிற்கும் வாளானது இஃது! நீங்கள் பாருங்களென்று சொல்லி எழும்பினார். 
  
1514. 
குறுக லாருயி
ருதிரங்கொப் பிளித்தகுற் றுடைவா 
     ளிறுக வீக்கிமற்
றொருபடைக் கலம்வல னேந்தித் 
     தறுகி லாமன
வலியொடு புயவரைத் தடத்தி 
     னறைகொள்
குங்குமத் தொடைபுரண் டசைந்திட நடந்தார். 
12 
      (இ-ள்) அவர்
அவ்வாறு எழும்பிச் சத்துராதிகளின் ஆவியையும் இரத்தத்தையுங் கக்கா நிற்கும் ஒரு குற்றுடைவாளை
அரையின்கண் இறுகும்படி கட்டி வேறேயொரு படைக்கலத்தை வலது கையில் தாங்கித் தடைப்படாத
மனவலிமையுடன் தோள்களாகிய பெருமை பொருந்திய மலைகளின்கண் வாசனை கொண்ட குங்கும்ப்
புஷ்பத்தினாலான மாலைகள் புரண்டு அசையும் வண்ணம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களிருக்கும் திசையை நோக்கிச் சென்றார். 
  
1515. 
உமறெ ழுந்திடும்
வெகுளியி னுடையவ னருளா 
     லமரர் தங்களி
லொருவரா றென்றுரு வாகிக் 
     கமல மென்பத
முகம்மதி னரும்பகை களைய 
     விமைநொ
டிக்குளந் தரமிருந் தவனியி னிழிந்தார். 
13 
      (இ-ள்)
உமறென்பவர் அவ்வாறு எழுந்திடும் கோபத்தினால் யாவற்றையும் சொந்தமா யுடையவனான அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவின் திருவருள் கொண்டு தேவர்களான மலாயிக்கத்துமார்களில் ஒரு மலக்கானவர்
தாமரை மலர் போன்ற மெல்லிய பாதங்களை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் அரிய விரோதத்தை நீக்கும் வண்ணம் 
 |