பக்கம் எண் :

சீறாப்புராணம்

616


முதற்பாகம்
 

சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் செழிமையுற்ற அழகிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கமானது வரிசை கொண்டு எழும்பிய பயிரைப் போலத் தழைப்புற்று வளரும் வண்ணம் நிலையாக நிற்கச் செய்து நடக்குகின்ற காலத்தில், குபிர் மார்க்கத்திலுள்ள தலைவர்கள் சொற்களினா லமையாத கோபமானது அதிகரிக்கும் மனசையுடையவர்களாய் ஒன்றாகச் சேர்ந்து பெருமை தங்கிய மலையைக் கொதுகின் கூட்டங்கள் அரிப்பதைப் போலச் சில வார்த்தைகளை வளர்த்தார்கள்.

 

1640. தண்டரளக் கதிர்வடிவின் முகம்மதினைக்

         குறைபடுத்தி யவர்தம் வாக்கின்

     விண்டுரைக்கு மறைமொழியை யெளியமொழி

         யெனவாக்கி வினவி யீமான்

     கொண்டவர்க டமையுமவர் மனையும்புறம்

         படுத்திநமர் குலத்துக் காகாத்

     தண்டனைகள் படுத்திடவும் பலபலதந்

         திரவசனஞ் சாற்றி னாரால்.

3

      (இ-ள்) குளிர்ச்சி தங்கிய முத்தினது பிரகாசத்தைக் கொண்ட அழகையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் குற்றப்படுத்தி அவர்கள் தங்களின் வாயைத் திறந்து வாக்கினால் சொல்லும் வேத வசனத்தைத் தாழ்ந்த வசனமென்று ஆகும்படி செய்து அதைக் கேட்டு அவர்களுக்கு ஈமான் கொண்டவர்களையும் அவர்களின் மனைவிமாரையும் இவ்வூரிலில்லாமல் வெளியாக்கி நம்மவர்களின் கூட்டத்திற்காகாத தண்டனைகள் படுத்தவும் பற்பல உபாய வார்த்தைகளைப் பேசினார்கள்.

 

1641. பிறவியா திவனுரையா தெனவிரித்துப்

         பகுத்தறியாப் பேத மாக

     அறபியா கியகுபிரர் பலர்கூறு

         மொழிவழிகேட் டவரை நோக்கி

     யிறபியா தரும்புதல்வ னிரங்காத

         கெடுமனத்த னென்று நீங்கா

     வுறவியா னென்பவரைப் பகையாக்கும்

         விடனாக்கி னுரைக்கின் றானால்.

4

      (இ-ள்) அப்போது உற்பத்தி யாது? இவன் வார்த்தையானது யாது? என்று சொல்லி விரிவாக்கிப் பகுத்துணராத மாறுபாடாக அறபியான அந்தக் காபிர்கள் அனேகர் சொல்லும் வார்த்தைகளின் ஒழுங்குகளை றபியா வென்பவன் தந்த புத்திரனும் இரங்காத கெட்ட மனத்தையுடையவனுமான உத்துபாவென்பவன் தனது