பக்கம் எண் :

சீறாப்புராணம்

626


முதற்பாகம்
 

ஹபீபுமக்கத்துக்குவந்த படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

 

 

1659. உள்ளறிவு குடிபோக்கி யிருந்தவன்றன்

         முகநோக்கி யுரவ நீயவ்

     வள்ளலிடஞ் சென்றதுவு மிருந்ததுவு

         நிகழ்ந்ததுவும் வகுத்துக் கூறென்

     றள்ளிலைவே லவர்கேட்ப முகம்மதுசொற்

         கெதிராக வமர ராலும்

     விள்ளரிதிந் நிலத்திலெவ ரெதிருரைப்ப

         ரெனுமொழியை விளம்பி னானே.

1

      (இ-ள்) அகத்தின்கண் தங்கிய அறிவைக் குடிபோக்கி இருக்கப் பெற்ற உத்துபா வென்பவனை மாமிசத்தை அள்ளிக் கொள்ளும் இலைகளைக் கொண்ட வேலாயுதத்தையுடைய அந்த அபூஜகிலின் சபையிலிருந்தவர்கள் பார்த்து அறிவையுடைய உத்துபாவானவனே! நீ அந்த வள்ளலாகிய முகம்மதினிடத்தில் போனதையும் இருந்ததையும் அங்கு நடந்ததையும் வகைப்படுத்திச் சொல்லுவாயாக வென்று கேட்க, அதற்கு அவன் அந்த முகம்மதென்பவனுடைய வார்த்தைகளுக்கு எதிராகத் தேவர்களான மலாயிக்கத்துமார்களாலும் பேசுவதற் கருமையாகும். இப்பூலோகத்தின்கண் எதிராகப் பேசுவோர்கள் யாவர்? ஒருவருமில்லரென்று இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

 

1660. அரியலம்பும் புயவிடலை மனமயக்குற்

         றுரைத்தவைகேட் டறிவின் மாந்தர்

     பெருகுமஃ றிணைச்சாதி யுளமனைத்தும்

         பேதுறுத்திப் பெட்பி னோடு

     முரைதரச்செய் துவரிவரை நிலைமாறச்

         செய்பவனிவ் வுத்து பாதன்

     றிருமனத்தைப் பேதுறுத்த லவற்கரிதோ

         வெனநகைத்துச் செப்பி னாரால்.

2

      (இ-ள்) வண்டுகள் ஒலியா நிற்கும் புஷ்பமாலையணிந்த தோள்ளைக் கொண்ட இளம்பருவத்தையுடையவனான அந்த உத்துபாவென்பவன் தனது மனமானது மயக்கமுற்று அவ்வாறு