|
முதற்பாகம்
(இ-ள்) அன்றியும், காதின் மடலினது
குழையைக் கிழியச் செய்து விசாலித்த கூந்தலைக் குழைத
லாக்கி வரிகளைக் கொண்ட வண்டுகளை சிறைப்படுத்தச்
சமுத்திரத்தை மனந்தேறாது அலையப் பண்ணி, அம்பையும்,
வேலாயுதத்தையும், கடைபடும் வண்ணம் கறுவி விஷத்தைப்
பாம்பினது படத்திடத்திற் சேர்த்து மீன் கூட்டங்களைப்
பயப்படும்படி நீரின்கண் தாழ்த்தி உறுதியான
பிரகாசத்தையும் கூர்மையையுங் கொண்ட வாளைப் போலப்
பிரதிதினமும் கொலைத் தொழிலிற் பழக்கமுற்றுச்
சிவந்து இரேகைகள் படர்ந்த மை தீட்டப்பெற்ற கண்களை
யுடையவள்.
1959. வள்ளையை வாட்டி யூசலை
யசைத்து
மண்ணொழி லாடவ ருயிரைக்
கொள்ளைகொண் டுடலங் குழைப்பதற் கன்றோ
குழையெனும் பெயரிடுங் குழையா
ளெள்ளையுஞ் சிறந்த குமிழையும் வாசத்
தினியசண் பகமலர் தனையும்
விள்ளருங் கானத் திடையலர் படுத்தி
விலங்கிட விலங்கிய குமிழாள்.
21
(இ-ள்) அன்றியும், வள்ளை யிலையை
வதங்கச் செய்து ஊசலையாட்டு வித்துப் பூமியின் கண்ணுள்ள
அழகிய ஆடவர்களின் ஆவியைக் கொள்ளைக் கொண்டு
அவர்களினுடலைக் குழையும்படி செய்வதற்காகவே குழையென்று
பெயரிடா நிற்கும் காதுகளை யுடையவள் எள்ளின்
புஷ்பத்தையும் சிறப்புத் தங்கிய குமிழ மலரையும்,
வாசனையைக் கொண்ட சண்பகப் பூவையும், தனக்கிணையில்லை
யென்று சொல்லுதற்கரிய காட்டினிடத்து அலரப்படுத்தித்
துலங்கும் வண்ணம் பிரகாசியா நிற்கும் நாசியை யுடையவள்.
1960. வெண்ணிலாத் தரள
நகைநிரை பொதிந்து
விரிந்தசெம் பவளமோ விலவோ
வண்ணவாய்ச் செழுஞ்சே தாம்பலின் மலரோ
வடிவுறு தொண்டையங் கனியோ
வெண்ணிநோக் கினருக் குவமையி னடங்கா
தெழில்குடி யிருந்தமு தொழுகிப்
பண்ணெலாஞ் சுவற்றி யாடவ ரிருகட்
பார்வையிற் சிவந்தமெல் லிதழாள்.
22
(இ-ள்) அன்றியும், வெள்ளிய
பிரகாசத்தைப் பொருந்திய முத்தைப் போன்ற பற்களை
வரிசையாகப் பொதித லுற்றுப் பரந்த செந்நிறத்தை யுடைய
பவளமோ? இவல மலரோ? அழகிய வாயைக் கொண்ட செழிய
செவ்வல்லிப் புஷ்பமோ? வடிவந்
|