முதற்பாகம்
(இ-ள்) அவ்வாறு அவர்களின்
பாதங்களாகிய தாமரை மலரைத் தனது தலையிற் கொண்டு
நின்று முதலில் கூறும் லாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்
றசூலுல்லாஹி யென்னுங் கலிமாவை அன்புடன் ஓதி அதைத்
தெளிந்தறிந்து உரிமையான நாயகனாகிய அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவர் நாயகம் நபிமுகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு இந்த
அறபி ஒப்பற்ற துணைவனாயினான்.
|