முதற்பாகம்
இருக்கப்பட்டவர்கள்
யாவர்களும் அந்த இரு குடும்பத்தார்களுக்கும் இடங்கொடாது
கோபத்தோடும் அடர்வதே யாவர்கட்கும் முறைமை யென்று
எல்லையுற ஒரு சீட்டு எழுதினார்கள்.
2145. சாதியின் விலக்கெனத்
தவறி லாதெடுத்
தோதிய வொப்பெனு முறியை யூரவர்
மாதிர மடர்க்கு பாவின் வாயலிற்
றூதரு மறியவென் றெடுத்துத் தூக்கினார்.
5
(இ-ள்) அம் மக்கமா நகரத்தை
யுடையவர்கள் அவ்வாறு சாதியின் விலக்கென்று தவறாது
எடுத்துக் கூறிய ஒப்பென்னும் அந்தச் சீட்டை மலைகளையும்
அடரா நிற்கும் கஃபத்துல்லாவின் வாயினில் தூதர்களும்
அறிய வென்று சொல்லி எடுத்துத் தொங்க விட்டார்கள்.
2146.
கொடுமனக் குறைசியங்
காபிர் கூடியப்
படிநடத் திடுமந்நாட் பலன்கொண் மாமறை
பிடிபடுந் தீனவ ரியாரும் பேதுறா
துடலுயி ரெனவுவந்
தொருங்கு கூடினார்.
6
(இ-ள்) கொடிய இருதயத்தை யுடைய
அழகிய குறைஷிக் காபிர்கள் ஒன்று சேர்ந்து அவ்வாறு
நடத்தா நிற்கும் அந்த நாளில், பிரயோசனத்தைக்
கொண்ட மகத்தாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது
பிடிபடுகின்ற தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்தையுடையவர்கள் யாவர்களும் தங்களின்
புத்தியானது மயக்கமடையாது உடலையும் உயிரையும் போல
விருப்பமுற்று ஒன்று சேர்ந்தார்கள்.
2147. தெரிதருந் தீனெறி
யவருஞ் சேர்தரு
மிருவகைக் கிளைஞரு மிசைந்த பேர்களுந்
தருவெனத் தருமபுத் தாலிப் தன்புய
வரையென வளைந்தவர் வாழு நாளினில்.
7
(இ-ள்) விளங்கா நிற்கும் தீனுல்
இஸ்லா மென்னும் மார்க்கத்தையுடையவர்களும், பொருந்திய
ஹாஷீம், முத்தலி பென்னும் இரு வகைக் குலத்தார்களும்,
மற்றுஞ் சேர்ந்த பேர்களும். கற்பகத் தருவைப் போலும்
கொடுக்கின்ற அபீத்தாலி பென்பவரின் தோள்களாகிய
மலைகளை யொப்பச் சூழ்ந்து அவர்கள் வாழும் நாளில்.
2148. போதலர் மதீனமா
புரத்தி னாடொறுங்
கோதுறா தவுசெனுங் கூட்டத் தார்கட்குங்
காதிய கசுறசுக் கிளைக்குங் கட்டறா
தோதிய பெரும்பகை யொழிந்த தில்லையால்.
8
|