பக்கம் எண் :

சீறாப்புராணம்

829


முதற்பாகம்
 

ளெத்தனையானாலும் அவைகளை ஒடுங்கும்படி செய்து அவர்களின் குறும்புகளை யொழித்திடும் வண்ணம் வருவா ரென்று சொல்லி வெளியிற் பரவிய சிவந்த கடைக் கண்களின் காருண்ணியத்தோடும் வானலோகத்தின்கண் போய்ச் சேர்ந்தார்.

 

2230. உருப்பொ திந்தநல் வடிவவ ருரைத்தொரு நொடிக்குட்

     பருப்ப தங்களுக் கிறைசெழுந் தடஞ்சிறை பரப்பித்

     திருப்பு நீரலைக் கடல்வரை புவிதிடுக் கிடவே

     விருப்ப முற்றுநந் நபியிடத் தடுத்தனர் விரைவின்.

23

      (இ-ள்) அழகைப் பொதியப் பெற்ற நல்ல சொரூபத்தை யுடைய அந்த ஜபுறயீ லலைகிஸ் ஸலாமவர்கள் அவ்வாறு கூறி ஒரு நொடி நேரத்தினகம் பருப்பதங்களுக்கு இராஜாவாகிய அம்மலக்கானவர் செழுமையான பெரிய சிறகுகளை விரித்து மடக்குகின்ற அலைகளையுடைய சமுத்திரங்களும் மலைகளும் பூமியும் திடுக்கிடும்படி ஆசையுற்று நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினிடத்து சீக்கிரமாய் வந்து அடுத்தார்கள்.

 

2231. வெற்ப டங்கலுங் கரங்களிற் பிசைந்துவிட் டெறிந்து

     புற்பு தக்கட லிறைத்தொரு கடலினிற் புகட்டிப்

     பற்ப மாக்கும்வெங் கனலையும் புகையறப் படுத்தி

     நிற்ப வீரமும் வலிமையும் படைத்தநன் னெறியார்.

24

      (இ-ள்) அன்றியும், அவர் மலைக ளெல்லாவற்றையும் தமது கைகளினாற் பிசைந்துவிட்டு வீசி நீர்க் குமிழியை யுடைய சமுத்திரங்களை இறைத்து ஒரு சமுத்திரத்திற் புகட்டி யாவற்றையும் பற்ப மாக்கா நிற்கும் கொடிய அக்கினியையும் தூமமானது அற்றுப் போகும்படி செய்து நிற்கும் வண்ணம் வீரமும் பெலமும் படைத்த நல்ல நேர்மையை யுடையவர்.

 

2232. உதய மாகிரிக் கொருகரந் தடவுவ ரொருகை

     புதைய மேற்கிரி தடவுவர் விண்ணைமண் புரளச்

     சிதறித் தீவக மேழையுங் கடலிடைச் சிதைப்பார்

     விதிய வன்விதித் திடுமவை யெவையெனும் விரதர்.

25

      (இ-ள்) அன்றியும், விதியவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் விதிக்கும் அவைகள் யாவை? என்று வினவா நிற்கும் விரத ராகிய அந்த மலக்கானவர் மகத்தான உதய கிரியை ஒருகையினாற் றடவுவார். ஒரு கையினாற் புதையும்படி மேன்மலையாகிய அஸ்தகிரியைத் தடவுவார். ஆகாயலோகத்தை மண்ணானது புரளும் வண்ணம் சிதறச் செய்து ஏழுதீவகங்களையும் கடலின்கண் சிதையும்படி செய்வார்.