பக்கம் எண் :

சீறாப்புராணம்

837


முதற்பாகம்
 

2254. மதிபகிர் நபிக்கன் பாக மந்திரக் கலிமா வோதி

     யிதயமொத் தினிதீ மான்கொண் டிருமனக் குபிரை நீத்துப்

     பதமலர் துதித்துத் தேடாப் பலன்கதி படைத்தே னென்னப்

     புதியநல் வடிவ னாகிப் பொருவிலத் தாசு போனான்.

12

      (இ-ள்) ஒப்பற்ற அத்தா சென்பவன் சந்திரனை இரண்டாகப் பகிரச் செய்த நாயகம் நபிகட் பிரானார் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அன்பாய் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது கலிமாவைச் சொல்லி மன மொத்து இனிமையோடும் ஈமான் கொண்டு பெரிய இருதயத்தினது குபிரை நீக்கி அவர்களின் பாதங்களாகிய தாமரை மலரைப் புகழ்ந்து தேடாத பலனை யுடைய மோட்சத்தைச் சம்பாதித்தேனென்று நல்ல நூதன சொரூபத்தை யுடையவனாய்த் தன்னிருப்பிடத்திற்குச் சென்றான்.