பக்கம் எண் :

சீறாப்புராணம்

851


முதற்பாகம்
 

சிங்கத்தைப் போல அழகினது பிரகாசத்தை எவ்விடமும் விரித்துக் காட்டும்படி வாசனை தங்கிய புஷ்பங்களைச் சூடிய கரிய கூந்தலையுடைய மயில் போலுஞ் சாயலைப் பெற்ற தங்களின் நாயகியிருந்த மாளிகையின்கண் வந்தார்கள்.

 

2294. நெருங்கிய கங்குற் போதி னிறைந்தவல் லிருளை மோதி

     யிருங்கதிர் கரங்க ளார வெடுத்தெடுத் தெறிந்து சிந்தி

     யருங்கண மனைத்து நாணி யகல்விசும் பொளிப்ப நோக்கிக்

     கருங்கடன் முகட்டில் வெய்ய கதிரவன் றோன்றி னானே

40

      (இ-ள்) அன்றியும், சூரிய னானவன் நெருக்கமுற்ற இராக் காலத்தில் பூரண மாகிய கொடிய அந்தகாரத்தை மோதிப் பெரிய கிரணங்க ளான கைகள் நிறையும்படி எடுத்தெடுத்து வீசிச் சொரிந்து அரிய நட்சத்திரங்களி யாவும் வெட்கித்து விசால மாகிய ஆகாயத்தின்கண் ஒளிக்கும் வண்ணம் பார்த்துக் கரிய சமுத்திரத்தினது உச்சியில் உதய மானான்.

 

2295. காசினி யிடத்தி னற்றைக் காலையின் கடன்க டீர்த்து

     நேசமுற் றுவந்து தீனோ ருடனினி துறைந்து சின்கள்

     மூசிவந் தீமான் கொண்டு போயது முறைவ ழாமற்

     பேசிநல் லுணவு மீந்த செய்தியும் பிறக்கச் சொல்வார்.

41

      (இ-ள்) பூமியின்கண் அன்றைய தினத்தினது காலைக் கடனாகிய சுபுஹை நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை யுடையவர்களோடு நேசமுற்று விரும்பித் தொழுது தீர்த்து இனிமையுடன் தங்கியிருந்து கொண்டு ஜின்கள் மூசுதலுற்று முறை தவறாமற் கூறி வந்து ஈமான் கொண்டு சென்றதும் நல்ல ஆகாரமுங் கொடுத்த வர்த்தமானமும் தோற்றும்படி கூற ஆரம்பித்தார்கள்.

 

2296. மறச்சிலைக் கரத்தீர் தீனின் மானுடர் வாயின் மிச்சி

     லிறைச்சியென் பனைத்துஞ் சின்கட் குணவென வீந்தேன் மேலுங்

     கறித்தவென் பிறைச்சி மிச்சி லென்பதைக் களங்க மில்லாப்

     புறத்தினில் வீச லியார்க்குங் கடனெனப் பொருந்தச் சொன்னார்.

42

      (இ-ள்) கொடுமையினது கோதண்டத்தைக் கொண்ட கையை யுடையவர்களே! தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை யுடைய மாந்தர்களினது வாயின் எச்சி யாகிய மாமிச மென்பது யாவும் அந்த ஜின்களுக்கு ஆகார மென்று கொடுத்தேன் மேலும் கறித்த வன்மையைக் கொண்ட மாமிசத்தினது எச்சி லென்பதைக் குற்ற