பக்கம் எண் :

114 வலம்புரி ஜான்


O

 

கோழி விதைக்குள்ளிருந்து

கொக்கரிக்கத் தொடங்கும்

மேகத்துணுக்கைப் போல ...

 

O

 

தலைக்கு மேலே

இடிக்கிற தரையை

தாவி உடைக்கும்

அவரைச் செடிகள் !

கேள்விக்குறியாய்

முதலில் கிளர்ந்து

வியப்புக் குறியாய்

வீங்குதல் போல ...

முகம்மது இறைவனின்

முற்றத்தில் நின்றார் !

 

வெள்ளை மனத்தவரின்

வெளிநாட்டுச் செலவு !

 

O

 

குறிஞ்சி மலர்கள்

ஒருமுறை பூக்க -

ஆகும் வயதை

அண்ணல் எட்டினார் ...

 

O

 

வளர்ப்புத் தந்தை

வாணிபத்திற்கு

சிரியா நாட்டிற்கு