பக்கம் எண் :

126 வலம்புரி ஜான்


O

 

அரேபியா முழுவதும்

கருதிய ஆலயம்

கஃபா என்பது !

 

O

 

சுற்றுச் சுவர்கள்

சரிவர இல்லாததால்

மழை நீர் புகுந்து

மாற்றம் விளைத்தது !

 

O

 

ஆடின சுவர்கள் ;

அரிந்தது சில இடம் !

 

O

 

ஒவ்வொரு கூட்டமும்

ஒவ்வொரு பாகம்

புதுக்க வந்தனர் ...

கணக்கில் வைத்தே

கல்லில் கவிதையை

செதுக்க வந்தனர் ...

 

O

 

‘ஹஜ்ருல் அஸ்வத்’

விண்ணுலகச் சின்னம் ...

வியந்தே போற்றும்

விளைந்த கருங்கல் !